எந்த எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் என்ன பலன்?
- நெய் - நினைத்தது நடக்கும், கடன் அடையும், குடும்ப வருமானம் அதிகரிக்கும்.
- நல்லெண்ணெய் – நம்மையும் நம் குடும்பத்தையும் பிடித்த நோய்கள் நீங்கும் நவகிரகங்களின் பரிபூரண அருள் கிடைக்கும்.
- தேங்காய் எண்ணெய் – குழப்பங்கள் நீங்கி மனத்தெளிவு ஏற்படும்.
- விளக்கெண்ணெய் - புகழ் உண்டாகும், குலதெய்வ ஆசி உண்டாகும்.
- வேப்ப எண்ணெய் – கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
- இலுப்பை எண்ணெய் - உடல் வளம் பெரும்.
- வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் - சகல ஐஸ்வர்யங்களும் ஏற்படும்.
- நெய் + வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் - செல்வம் சேரும்.
- விளக்கெண்ணெய் + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய் – அன்னை பராசக்தி அருள் உண்டாகும், கிரகதோஷம் நீங்கும்.
குத்துவிளக்கில் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள்
பொதுவாக குத்துவிளக்கில் பல முகங்கள்
உண்டு, அதன் ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.
- ஒரு முக குத்துவிளக்கு – மத்திம பலன் உண்டு
- இருமுக குத்து விளக்கு - கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்கும்
- மூன்று முகம் கொண்ட குத்து விளக்கு - குடும்ப விருத்தி உண்டாகும்
- நான்கு முகம் கொண்ட குத்துவிளக்கு - மனை மற்றும் கால்நடை விருத்தி உண்டாகும்
- ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கு - சகல சௌபாக்கியம் உண்டாகும்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் விளக்குகள்
காமாட்சி அம்மன் விளக்கு :
காமாட்சி அம்மன் விளக்கு என்பது, எல்லோரின் வீட்டில் இருக்கக்கூடிய ஒரு விளக்கு ஆகும்.
புதுமண பெண்ணுக்கு தாயார் வீட்டு சீதனமாக இரண்டு குத்து விளக்கும், ஒரு காமாட்சி விளக்கும் கொடுப்பது இன்றளவும் குடும்பங்களில் வழக்கமாக
கொண்டுள்ளனர். எந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தாலும் அங்கு இருக்கும் சுபப்
பொருட்களில் ஒன்றாக காமாட்சி அம்மன் விளக்கு உள்ளது.
பாவை விளக்கு:
பாவை என்பது பெண்ணை குறிக்கும்
சொல்லாகும். அதாவது இறைவனின் திருவுருவங்களுக்கு முன்னால் இரண்டு பெண்கள் விளக்கை
ஏந்தி உள்ளது போல் இது அமைக்கப்பட்டு இருக்கும்.
மாவிளக்கு :
இது புரட்டாசி மாதத்தில் திருவோணம்
நட்சத்திரத்தில் பெருமாளுக்கு போடப்படும் விளக்காகும். இது புரட்டாசி மாதத்தில்
வரும் எல்லா சனிக்கிழமையும் போடப்படுவது வழக்கம்.
எந்தெந்த இடங்களில் தீபங்கள் ஏற்றலாம்?
வீட்டின் பூஜையறை
நடு முற்றம்
சமையலறை
துளசி மாடம்
பாம்பு புற்று
நீர் நிலைகளின் கரைகள்
கோவில்கள்
தீபம் ஏற்றும் திசை
கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் -
அனைத்து துன்பங்களும் நீங்கும்.
மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் - கடன்
தொல்லை நீங்கும். அனைத்து தோஷங்களும் நீங்கும்.
வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் -
திருமணத்தடை நீங்கும். கல்வித்தடை நீங்கும்.
தெற்கு நோக்கி தீபம் ஏற்றினால் -
மரணபயம் உண்டாகும். துன்பங்கள் வந்து சேரும். கடன் உண்டாகும்.
விளக்கில் பயன்படுத்தப்படும் பலவகையான திரியும் அவற்றின் பயன்களும்
- பஞ்சுத் திரி பயன்படுத்தினால் - மகிழ்ச்சி உண்டாகும்.
- தாமரைத் தண்டு திரி பயன்படுத்தினால் - நிலைத்த செல்வம் உண்டாகும்.
- வாழைத் தண்டு திரி பயன்படுத்தினால் - மன அமைதி உண்டாகும்.
- மஞ்சள் துணித் திரி பயன்படுத்தினால் - செய்வினை கோளாறுகள் நீங்கும்.
- சிவப்பு துணித் திரி பயன்படுத்தினால் - இனிய குடும்ப வாழ்க்கை அமையும்.
- வெள்ளைத் துணித் திரி பயன்படுத்தினால் - செல்வம் மற்றும் செல்வாக்கு உண்டாகும்.