ஜோதிடமும் கிரக நிலைகளும்
மனிதர்களுக்கு ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுக்கு
ஏற்றவாறு எதிர்கால பலன் கூறும் ஜோதிடம் எல்லோருக்கும் பலிக்குமா என்றால் எழுபது சதவிகிதம் இல்லை
என்றுதான் கூற வேண்டும்.
“மனிதர்களின் பிறப்பு, இறப்பு, குழந்தைகள்,இவைகளை துல்லியமாக கூறிவிடமுடியாது. கால மாற்றத்தால் சில விஷயங்கள் தவறி விடுவதை போல ஜோதிட பலன்களும் சில வேளைகளில் தவறிவிடுவதும் உண்டு. அவ்வாறு பலன்கள்
தவறிவிடும்போது ஜோதிடமே தவறு என்று கூறிவிடக் கூடாது.
ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுக்கு ஏற்றவாறு
எதிர்கால பலன்களை ஜோதிடம் கணித்துக் கூறுகிறது. ஆனால் இந்த பலன்கள் அனைவருக்கும்
பலிக்கும் என்று கூற முடியாது.
நமது பூமியின் சுற்றுவட்டப்பாதை இவற்றில் எங்காவது
சிறு மாறுதல் நடக்கும்போது ஜோதிடப் பலன்கள் தவறி விடக்கூடும்.
நமது கைரேகை சாஸ்திரத்தில் சந்திரமேட்டில் சக்கரம், சூலம், வேல் போன்ற அமைப்புகள் இருந்தால், அவர்களுக்கு கைரேகை பலன்கள் கூறமாட்டார்கள். காரணம் அவ்வாறு கூறினால்,சொல்லும் வாக்கு பலிகாது.
இவர்களது படைப்பு, கடவுளின்
நேரடிகண்காணிப்பில் இருப்பதாக கருதப்படும். இவர்களது படைப்பில் வேறு ஏதோ ஒரு
கூடுதல் நோக்கம் இருக்கும். அந்த நோக்கம் முடியும் வரை பூமியில் ஜீவிப்பார்கள்
என்று அர்த்தம் ஆகிறது.
ஜோதிட பலன்கள் யாருக்கெல்லாம் பலிக்காது?
நவகிரகங்களில் ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு பாவத்தில் நின்றால், அவர்களுக்கு ஜாதகம் பலிக்காது.
5 அல்லது 6 கிரகங்கள் நீசம் பெற்று இருந்தால், அவர்களின் வாழ்க்கை சாலை ஓரங்களில் வாழக்கூடிய நிலை
உண்டாகும். இத்தகைய ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு ஜோதிடப் பலன்கள் பலிக்காது.
ஒருவரின் ஜாதகத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தால் அவர்களுக்கு
ஜோதிடம் பலிக்காது.
லக்னத்துக்கு பாதகாதிபதியின் நட்சத்திர
சாரத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் என்று இருந்தால், அவர்கள் வாழ்வில் வறுமை நிலையே நீடிக்கும். இவர்களுக்கு
ஜோதிடம் பலிக்காது.
கேதுவுடன் 4 கிரகங்கள் சேர்ந்து, ராகுவுடன் 3 கிரகங்கள் சேர்ந்து இருப்பவர்களுக்கு ஜாதகம்
கூறினால் அது பலிக்காது.
எவ்வளவு யோகம் இருந்தாலும் அவர்களின் ஜாதகத்தில்
கேதுவை நோக்கி அனைத்து கிரகங்களும் சென்று கொண்டே இருந்தால், அவர்களுக்கு ஜாதக பலன் பலிக்காது.
அமாவாசை திதியில் பிறந்து சூரியன்-சந்திரன்-சனி
ஆகிய கிரகங்கள் ராகு அல்லது கேதுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது சூரியன், சந்திரன்-சனி இவர்கள் நீசம் பெற்றாலோ அவர்களுக்கு ஜோதிடம்
பலிக்காது.
அஷ்டமி திதியில் பிறந்து, சூரியன்-சந்திரன்-குரு-செவ்வாய்-சனி ஆகிய ஐந்து கிரகங்கள்
ஒரே பாவத்தில் நின்று இருந்தால், அவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.
பரிகாரம்
ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் விரதம் இருந்து, சிவனை வழிபட்டால் மட்டுமே இவற்றிலிருந்து விடுபட முடியும்.அதிலும் சனி மற்றும் சோம வாரமான திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இதில் கலந்து கொண்டு வழிபடுவோருக்கு சிவனின் அருள் முழுமையாக கிடைக்கபெற்று எல்லா நன்மைகளும் கிட்டும்..
ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் விரதம் இருந்து, சிவனை வழிபட்டால் மட்டுமே இவற்றிலிருந்து விடுபட முடியும்.அதிலும் சனி மற்றும் சோம வாரமான திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இதில் கலந்து கொண்டு வழிபடுவோருக்கு சிவனின் அருள் முழுமையாக கிடைக்கபெற்று எல்லா நன்மைகளும் கிட்டும்..