நவராத்திரி கொலுவின் சிறப்புகள்
நவராத்திரி விழா
என்பது முன்னொரு காலத்தில் மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்தார். அந்த நந்நாளை நினைவு கூறும்
விதமாக கொண்டாடப்படுவதே நவராத்திரி ஆகும்.
நவராத்திரி
பண்டிகையை முதன் முதலில் ராமர் தான் கொண்டாடியதாக புராணங்கள் கூறுகின்றன.
நவராத்திரி பண்டிகையில் அந்த ஆதிபராசக்தியே லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என முப்பெரும் தேவிகளாக அவதாரம்
எடுத்து நம் வாழ்க்கைக்கு தேவையான ஐஸ்வர்யம், ஞானம், வீரம் என அனைத்தையும் நமக்கு அருள்கிறாள்.
நவராத்திரி
கொலுவில் இடம்பெறும் பிரமாண்டமான மலைகள், பலவகையான பாதாள குகைகள், நிறைய
நீர்வீழ்ச்சிகளுடனான ஆறுகள், எரிமலை, நெருப்பு, பாற்கடலில் மகாவிஷ்ணு, தியானசக்தி, அதிர்வுகளுடன்
சமுத்ரம், பிரமீடு குகை, பலவித மிருகங்கள், பறவைகள், பொம்மைகள், ஐஸ்வர்யலஷ்மி, குகை, சம்ஹாரகோலம், மலைகுகைகள், ஆற்று ஊற்றுக்கள், ருத்திராட்ச மரங்கள், மற்றும் பலவித அதிசய சக்தி வாய்ந்த தெய்வீகப்
பொருட்களுடன் பிரபஞ்ச சக்தியை உணர்ந்து வீட்டு கொலுவில் வைத்து பூஜிப்பதால் அம்பாளின்
அருளை முழுவதுமாக பெற முடியும்.
இவ்வாறு நம்
வீட்டில் கொலு வைத்து வழிபடுவதால் அந்த அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில்
எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். தினந்தோறும்
நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப்
பொருட்களை மஞ்சள், குங்குமம்,
வளையல், ரிப்பன் போன்றவை பூஜைக்கு வரும் அனைவருக்கும்
தானமாக அளிக்க வேண்டும்.
குழந்தைகள் பல வித பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் நாம் அந்த கதைகளை
தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளின் புராண கதைகள் அறிவையும், பக்தியையும், திறமையையும் இம்மாதிரியான கதைகள் மூலம் வளர்க்க
முடியும்.
இந்த நவராத்திரி
பூஜையை ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் வழிபட்டு பூஜைக்கு வரும் அனைவருக்கும் தங்கள சக்திக்கு உட்பட்டு தன்னால் முடிந்த தான தர்மத்தை அளிப்பதன் மூலம் அம்பிகை நம் வீட்டில் நிரந்தரமாக
வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை.
நவராத்திரி விரதம் கடைபிடிக்கும் முறை
நவராத்திரியின்
ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், விரதம் இருந்து பூஜித்த பிறகே உணவருந்த வேண்டும். மெத்தைகளில் படுக்காமல் தரை விரிப்புகளில் மட்டுமே படுக்க
வேண்டும். உணவு முறைகளிலும் மற்ற பழக்க வழக்கங்களிலும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். பிரதமைத் திதியில் வரும் ஹஸ்த நட்சத்திரம் வரும் நாள் உன்னதமான நாளாகும். அந்த நாளில் அந்த பராசக்தி தேவி தன்னைப்
பூஜித்தவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள்.
எந்த நாளில் யாரை வழிபட வேண்டும்
முதல் மூன்று
நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும்
வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி
மஹாலட்சுமியை வழிபடவேண்டும். கடைசி மூன்று நாட்கள் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.
சுமங்கலிப்
பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் சக்தியாகப் பாவித்துக்
கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம்
முதலியவற்றை கொடுத்து அவர்களின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும். இதன் மூலம்
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் அந்த அம்பாளின் பரிபூரணமான
அருள் கிடைத்து சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.