-->

நீரில் ஊற வைத்த வெண்டைக்காய் சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்


உடலில் உள்ள கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்கும் வெண்டக்காய்


வெண்டைக்காய்

வெண்டைக்காயின் வழ வழ கொழ கொழாவுக்குக் காரணம் அதில் இருக்கும் gum மற்றும் pectin ஆகும். இவை இரண்டும் ஜாம் மற்றும் ஜெல்லிகளில் அவை கெட்டி படுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. வெண்டைக் காயில் இருக்கும் உயர்ந்த வகை நார் சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது.

வெண்டக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

  • வெண்டைக்காயில் இருக்கும் கோந்து (gum) கொலஸ்ட்ராலை கட்டுப் படுத்தி பித்த அமிலத்தால் எடுத்து செல்லப்படும் நச்சுப் பொருட்களை வடிகட்டவும் உதவுகிறது.
  • எல்லா நோய்களும் பெருங்குடலில் தான் உருவாகின்றன. வெண்டைக் காயில் இருக்கும் நார் சத்துக்கள் நீரை உறிஞ்சி அதிக மலம் வெளியேற உதவுவதால் மலச் சிக்கல் தடுக்கப்படுகிறது.
  • எந்த விதமான நச்சுப் பொருட்களும் இதில் இல்லவே இல்லை. எனவே வெண்டக்காய் சாப்பிடுவதால் பக்க விளைவுகளும் கிடையாது. சுலபமாக குறைந்த விலையில் கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் வெண்டக்காய் நம் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா கிருமிகளையும் ஊக்குவிக்கிறது.
  • இதில் இருக்கும் போஷாக்குகள் முழுவதும் நமக்குக் கிடைக்க வேண்டுமானால் இதை கொஞ்சமாக சமைக்க வேண்டும். மிதமான தீயில் அல்லது ஆவியில் வேகவைப்பது நல்லது. சிலர் இதனைப் பச்சையாகச் சாப்பிடுகிறார்கள்.
  • நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இரவு ஒரு இளம் வெண்டை காயை நீரில் ஊறப் போட்டு அதிகாலை எழுந்தவுடன் அந்நீரைக் குடித்துவிட்டு காயையும் மென்று தின்ன வேண்டும். தொடர்ந்து செய்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.
  • அசிடிட்டி இருப்பவர்கள் தினமும் 6 வெண்டைக் காய்களை சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி குறையும்.
  • வெண்டக்காய் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிப்பதை தடுக்கும்.
  • சுவாசம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் வெண்டக்காய் ஊற வைத்த நீர அருந்துவது நல்லது.
  • வெண்டக்காயில் பால் சேர்த்து வேக வைத்தும் குடிக்கலாம்.
  • பிஞ்சு வெண்டக்காயை வேகவைத்து எடுத்த நீருடன் சர்க்கரை சேர்த்து குடித்தல் இருமல்,நீர்கடுப்பு சரியாகும்.
  • வெண்டக்காயை பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் தூய்மை பெறுவதுடன் ஈறுகளில் இரத்த ஓட்டம் தூண்டப்படும்.

Previous Post Next Post