சர்க்கரை நோயும் ஆன்மீகமும்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.அனால்
மக்கள் அதை மறந்து ஒவ்வொரு நாளும் பணத்தை தேடி உடல் ஆரோக்கியத்தை மறந்து
வெளியுர்களிலும்,வெளி நாடுகளிலும் சென்று வேலைபார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஓடி ஓடி உழைத்து பல கோடி சம்பாதித்து மிக பெரிய பணக்காரனாய் நோயாளியாய் வாழ்வதை
விட, அதிக பணம் சம்பாதித்து ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் வாழும் காலம் முழுவதும்
நோய் நொடி இல்லாமல் எதற்கும் அடுத்தவரின் உதவியை நாடாமல் உடல் ஆரோக்கியத்தோடு
வாழ்பவனே சிறிந்த செல்வந்தன் ஆவான்.
.
அனால் இன்று ஏழை பணக்காரன் என்று பாகுபாடு பார்க்காமல் அனவைரையும் தாக்கும்
ஒரே நோயாக சர்க்கரை வளர்ந்துவிட்டது.பணக்கார வியாதி என்று சொல்லப்பட்ட இந்நோய்
இன்று பிறந்த குழந்தை,கர்ப்பிணி பெண்கள்,முதியவர்கள் என சராசரியாக அனைவரையும்
தாக்குகிறது.
சர்க்கரை நோய் என்பது உடலின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால்
ஏற்படுவதாகும்.இந்நோய் பரம்பரை ரீதியாகவும்,சரியான உணவு பழக்கத்தை பின்பற்றாத
காரணத்தினாலும் ஏற்படுகிறது.ஆன்மீக ரீதியாக பார்க்கும்போது ஒரு நபரின் ஜாதகத்தில்
லக்னத்தின் 6 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தாலோ அல்லது அந்த 6 ஆம் வீடு
சுக்கிரனுக்கு சொந்த வீடு ஆட்சி வீடாக இருந்தாலோ அந்நபருக்கு சர்க்கரை வியாதி
ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ள்ளது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்
சர்க்கரை நோயால் பாதிப்படைந்தவர்கள் 27 மொச்சை பயிறு எடுத்துக் கொள்ளுங்கள்.அதை
ஒரு வெள்ளை துணியில் முடிந்து,நோய் பாதிப்பு உள்ளவர்கள் உறங்கும் தலையணைக்குள்
வைத்து விட வேண்டும்.
அந்த தலையணையை 90 நாட்கள் சர்க்கரை வியாதி கொண்டவர்கள் தலைக்கு வைத்து உறங்க வேண்டும்.
91 ஆம் நாள் காலையில் நோய் பாதிப்பு உள்ளவர்களை கிழக்கு திசை பார்த்து அமரச்செய்து
அந்த தலையணையை கொண்டு 3 முறை திருஷ்டி சுற்றி ஓடும் நதி நீரில் போட்டு விட
வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு நோயின் தீவிரம் குறையும்.
ஜாதகத்தில் லக்னத்தின் 6 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தாலோ அல்லது அந்த 6
ஆம் வீடு சுக்கிரனுக்கு சொந்த வீடு ஆட்சி வீடாக இருக்க பெற்றவர்கள்
வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி சுக்கிர
பகவனை வணங்கிய பின்பு ஒரு வேளை மட்டும் பழம் ,பால் போன்றவற்றை உண்டு விரதம்
இருந்து வந்தால் சர்க்கரை நோய் ஏற்படாமல் சுக்கிரன் அருள்புரிவர்.
கடவுளை
வணங்குவதோடு மட்டுமல்லாது தினசரி சரியான நேரத்திற்கு உணவும்,முறையான
உடற்பயிற்சியும் செய்து வந்தால் என்றுமே நோயற்ற வாழ்வு வாழலாம்.