.
பப்பாளி வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.பப்பாளி இலை காய்ச்சலை குணபடுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்
- பப்பாளி பழம் – 1 கப்
- தேங்காய் பால் – 1 கப்
- வெல்லம் – 50 கிராம்
- முந்திரிப்பருப்பு – சிறிதளவு
- கிஸ்மிஸ் பழம் – சிறிதளவு
- ஏலக்காய் பொடி – சிறிதளவு
செய்முறை
- நன்கு பழுத்த பப்பாளி பழமாக வாங்கி அதை தோல் சீவி விதைகளை எடுத்து சிறிய துண்டுகளாகநறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் நறுக்கி வைத்த துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அரைத்த கலவையுடன் தேங்காய் பால் , வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் அதில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழம் சேர்த்து ஏலக்காய் பொடி தூவினால் சுவையான பப்பாளி பாயாசம் ரெடி.