-->

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி


நீர் சத்து நிறைந்த வெள்ளரிக்காய் பச்சடி

சப்பாத்தி மற்றும் பிரியாணியுடன் சாப்பிட ஒரு சுவையான வெள்ளரிக்காய் தயிர் பச்சடி. 

தேவையான பொருட்கள்
  1. கெட்டித்தயிர் - 1 கப் 
  2. உப்பு – தேவையான அளவு  
  3. சர்க்கரை - 1 ஸ்பூன் 
  4. பிஞ்சு வெள்ளரிக்காய் - 2 கப் ( பொடியாக நறுக்கியது ) 
  5. கெட்டி அவல் - 4 ஸ்பூன் 
  6. கேரட் துருவல் - 3 ஸ்பூன் 
  7. கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி  
  8. நீளமாக நறுக்கிய வெங்காயம் - 4  

அரைக்க
  1. தேங்காய்த்துருவல் - 1/4 கப் 
  2. பச்சைமிளகாய் – 1

செய்முறை
  1. முதலில் தேங்காய் துருவலையும் ,பச்சை மிளகாயையும் மிக்சியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அவலை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் தயிர், அரைத்த விழுது, அவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் பொடியாக நறுக்கியாக வைத்துள்ள வெள்ளரிக்காய் ,கேரட் துருவல்,நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,சிறிது சர்க்கரை சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் சுவையான  வெள்ளரிகாய்  தயிர் பச்சடி ரெடி.


Previous Post Next Post