-->

உடல் கொழுப்பை கரைக்க உதவும் சுக்கு தோசை செய்வது எப்படி

வாய்வினால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது.

சளிஇருமல் தொல்லை இருப்பவர்களுக்கு இந்த சுக்கு தோசை ஒரு சிறந்த வரப்பிரசாதம்.

தேவையான பொருட்கள்
  1. பச்சரிசி ஒரு கப்
  2. சுக்குத் தூள் இரண்டு ஸ்பூன்
  3. புழுங்கல் அரிசி ஒரு கப்
  4. முழு உளுத்தம் பருப்பு ஒரு கப்
  5. கெட்டித் தயிர் ஒரு கப்
  6. மிளகு இரண்டு ஸ்பூன்
  7. சீரகத் தூள் இரண்டு ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு  
செய்முறை

  1. உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை தூசு, கல் நீக்கி களைந்து சுமார் நான்கு மணி நேரம் நன்கு ஊறவைத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
  2. அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு, தயிர் ஆகிய இவற்றை சேர்த்துப் புளிக்க விடவும்.
  3. தோசையாக ஊற்றும் சமயத்தில் சுக்குத் தூள், மிளகு, சீரகத் தூள் ஆகிய இவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. பின்னர் தோசைக்கல்லில் தேவையான அளவு எண்ணெய் தடவி காய விட்டு மாவை ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
  5. இதோ இப்போது சுவையான சுக்கு தோசை தயார்.




Previous Post Next Post