மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்
மழைக்காலத்தில் வரும் பல்வேறு நோய்களால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான்.எனவே குழந்தைகளை எப்போதுமே கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.அதுவும் மழைக் காலம் என்றால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் போன்ற அனைத்தும் வர ஆரம்பித்துவிடும்.
நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருப்பது குளிர்ச்சியான மற்றும்
ஈரப்பதமான சூழ்நிலைதான்.
இதற்குக் காரணம்.ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளாகும்.
ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்
போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கும். நெற்றி
மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகள், தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.
இதனால், சைனஸ் தலைவலி வரலாம்.
மழை காலத்தில் ஏற்படும் நோய்கள்
பன்றி காய்ச்சல்
இது ஒரு வகையான வைரஸ் தொற்று நோய்
ஆகும்.இதனால் இருமல், சளி மற்றும் சுவாச கோளாறுகள் ஏற்படும். அதைத் தொடர்ந்து அதிக
காய்ச்சல்,தொண்டை வலி, தலைவலி, வாந்தி ஆகிய பாதிப்புகள்
ஏற்படும்.
ஆஸ்துமா
இந்நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் சுவாசக் குழாய் சுருங்கி இருக்கும். இதற்கு பல காரணங்கள் உண்டு. மழை மற்றும் குளிர் காலங்களில் இந்நோய்
உள்ளவர்களுக்கு அதிக மூச்சுத் திணறல், இருமல், சளி ஏற்படும்.
கொசுக்களால் ஏற்படும் நோய்கள்
மழைநீர் தேங்குவதால் கொசுக்கள்
உற்பத்தி அதிகமாகும். இதனால் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற
காய்ச்சல்கள் வரும்.
டெங்கு காய்ச்சல்
104 டிகிரி
வரை அதிகப்படியான காய்ச்சல். தலைவலி, உடம்புவலி, வாந்தி ஏற்படும். நோய் முற்றினால் உடலில் உள்ள
ரத்தம் உறையும் தன்மை பாதிக்கப்படும்.மலேரியா: குளிர்காய்ச்சல், வயிறு வலி, தலைவலி, வாந்தி ஏற்படும்.
சிக்கன் குனியா
காய்ச்சல், மூட்டுகளில் வலி, தலைவலி, குமட்டல், தோலில் மாற்றங்கள் ஏற்படும்.இதனை தடுக்க நம் வீட்டை சுற்றி தண்ணீர்
தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீர் சேகரித்து வைக்கும் தொட்டிகள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை
அடிக்கடி சுத்தம்செய்ய வேண்டும்.
டைபாய்டு
நீண்ட நாள் காய்ச்சல், வயிற்றுவலி, வாந்தி, உடல் தளர்ச்சி.மஞ்சாள் காமாலை: காய்ச்சல், வாந்தி, உடல் தளர்ச்சி, தலைவலி, மூட்டு வலி, சிறுநீர் மஞ்சளாக கழித்தல் போன்றவை டைபாய்டின் அறிகுறிகளாகும்.
காது,மூக்கு,தொண்டை வியாதிகள்
மழைக்காலங்களில் டான்சில்
மற்றும் சைனஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும். தினமும் உப்பு கலந்த
வெந்நீரால் தொண்டை வரை கொப்பளிக்க வேண்டும்.குளிர்ந்த காற்று முகத்தில்
படாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
நோய் வராமல் தடுக்க செய்ய வேண்டியவை:
மழைக்காலத்தில் டான்சில் மற்றும் சைனஸ் நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பதிப்புகள் ஏற்படும். இவர்கள் தினமும் உப்பு கலந்த நீரால் தொண்டை வரை கொப்பளிக்க வேண்டும்.
வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பியதும், வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்கு கழுவ
வேண்டும். வீட்டைச் சுற்றி நடப்பதாக இருந்தாலும், காலணி அணியாமல் செல்லக் கூடாது.
தெருவில் விற்கும் உணவுகள், நீண்ட நாட்கள் ஆன திண்பண்டங்கள் முதலியவற்றை வாங்கி
சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
இந்தப் பிரச்னைகள் வராமல் இருக்க, வெளி இடங்களில் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும்
குளிர்பானங்கள் அருந்துவதையும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி ஆவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் சளி, இருமல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.
தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து,ஆற வைத்து பின்
குடிப்பதால் நீரினால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம்.
சுத்தமான, ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு, சுகாதாரமான சுற்றுச்சூழலில் வாழ்ந்தால்
பெரும்பாலான நோய்களை தடுத்துவிடலாம்.
நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை போன்ற சித்தமருத்துவ மருந்துகளை
எடுத்துக்கொள்ள வேண்டும்.
மழை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்
சூப்
மழை பெய்யும் போது சூடாக சூப்
சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றுகையில், நூடுல்ஸ் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சமைத்து
சாப்பிடுவதற்கு பதிலாக, காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் சூப் செய்து குடித்தால், உடலில்
சத்துக்களின் அளவை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
பழங்கள்
மழைக்காலத்தில் பழங்களை
அதிகம் உட்கொள்ள வேண்டியது முக்கியம். ஏனெனில் பழங்களில் ஏராளமான சத்துக்கள்
நிறைந்துள்ளன. அதிலும் வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சு, திராட்சை, பெர்ரிப்
பழங்கள், சாத்துக்குடி போன்றவற்றை உட்கொள்வது நல்லது. குறிப்பாக பழங்களை சாப்பிடும் முன் அவற்றை
நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
ஜீரகம்
மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும்.மேலும்
உண்ணும் உணவுகள் செரிமானமாகாமலும் இருக்கும். எனவே உங்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், செரிமான மண்டலம் சீராக இயங்கவும், சீரகத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
இஞ்சி டீ
தினமும் டீ குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள்
அதில் சிறிது இஞ்சியை தட்டி போட்டு கொதிக்க வைத்து பின் வடிகட்டி குடித்தால்
சளியினால் ஏற்படும் தொந்தரவு நீங்கும்.
மஞ்சள்
மஞ்சள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை
வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புத்
தரும். எனவே மஞ்சளை அனைத்து உணவிலும் சேர்ப்பதோடு, தினமும்
இரவில் சூடான பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.