இஞ்சி அல்வா
இஞ்சியை ரத்தசோகையைக் கட்டுப்படுத்தவும்,நாம் உண்ணும் உணவை செரிமானம் அடைய செய்வதற்கும் உதவுகிறது .
தேவையான பொருட்கள்
- இஞ்சி - 100 கிராம்
- பனை வெல்லம் - 2 கப்
- விதை நீக்கிய பேரீச்சம்பழம் – 10
- ஏலக்காய்தூள் - ஒரு டீஸ்பூன்
- நெய் - 2 டீஸ்பூன்
- கசகசா - 2 டீஸ்பூன்
- முந்திரி - 10
- காய்ந்த திராட்சை - 10
- கேசரி கலர் - 1 சிட்டிகை
செய்முறை
- இஞ்சியைத் தோல்சீவி அரைத்து, அத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- அந்தச் சாறில் பேரீச்சம்பழங்களை ஊறவிடவும். வெல்லத்தூளை வெந்நீரில் கரைத்து வடிகட்டவும்.
- கசகசாவை லேசாக தண்ணீர் சேர்த்து மை போல அரைத்தெடுக்கவும்.
- பின் ஊறிய பேரீச்சம்பழத்தை அந்தச் சாறோடு மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதோடு, வெல்லத்தண்ணீர், கசகசா விழுது சேர்த்து, வாணலியில் நெய்விட்டுக் கிளறவும்.
- அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, தொடர்ந்து கிளரி அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கினால் சுவையான சத்தான இஞ்சி அல்வா ரெடி.
.