உளுந்தங்களியை வாரமொருமுறை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெற்று எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்கும்.கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் சுகபிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம்.
தேவையான பொருட்கள்
- உடைத்த உளுந்து – 1 கப்
- பச்சரிசி – 1 கைப்பிடி
- கருப்பட்டி அல்லது பனை வெல்லம்– 1 1/2 கப்
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- தண்ணீர் – 4 கப்
- முதலில் உளுந்தை சுத்தம் செய்து நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதே போன்று பச்சரிசியையும் கல் நீக்கி சுத்தம் செய்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் வறுத்த உளுந்தையும்,பச்சரிசியையும் நன்கு அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
- கருப்பட்டியை நைத்து தண்ணீர் ஊற்றி கரைத்து அடுப்பில் ஏற்றி சூடாக்கி வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- வடிகட்டிய வெல்லக் கரைசலில் உளுந்து, அரிசி மாவைப் சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
- நன்கு சுருண்டு வரும்போது நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறினால் சத்தான உளுந்தங்களி ரெடி.