குறட்டைக்கு இனி குட்பை சொல்லுங்க
குறட்டைவிட்டுத் தூங்கும் மனிதர்கள்
நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என நினைகிறோம்.அது தான் இல்லை .அது ஒரு மயக்க நிலையே
தவிர ஆரோக்கியமான தூக்கம் கிடையாது என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட
இந்தக் குறட்டை பிரச்னை இருந்தது ஆனால், தற்போது இளம் வயதினரையும்
பாதிப்புகுள்ளாக்குகிறது.
குறட்டை விடுவது ஒரு சிரிப்பிற்குறிய விஷயம்
கிடையாது. இந்த குறட்டை விடும் பழக்கத்தினால் அவர்கள் மட்டுமல்லாது உடன்
இருப்போரும் பாதிப்படைகின்றனர்.
குறட்டை விடுபவரால் மற்றவர்களுக்கு தூக்கம் போய்
விடுகிறது. சில சமயம் குழந்தைகள் குறட்டை ஒலியினால் அலறி அழும். மேலும் குறட்டை
விடும் நபரை பார்த்தால் பயமாகவும் இருக்கு!தூங்கி எழுந்ததும் 'பயங்கரமான குறட்டை விடுகிறீர்களே!என்று கேட்டால், அப்படிய!எனக்குத் தெரியவில்லை என்று ஆச்சரியப்படுகின்றனர்.
குறட்டை வருவதற்கு பல காரணங்கள் உண்டு. உடல்
பருமன், தொண்டை அடைப்பு மற்றும் தொண்டை தசையிலுள்ள தளர்வு மற்றும் வீக்கம் என பலவற்றை
குறட்டைக்கு காரணமாக சொல்லலாம். மூச்சு விடும் போது தொண்டையில் உள்ள மெல்லிய தசை
ஆடுவதால் குறட்டை சத்தம் வருகின்றது.போன்ற பல காரணங்களால் குறட்டை வருகிறது.
குறட்டை ஏன் வருகிறது என்று தெரியுமா?
அதிக நேரம் கண்விழித்து தூங்காமல் இருப்பதால்
குடலில் வாயுவின் ஓட்டம் அதிகப்படுகிறது? வாயுவின் சீற்றம் மலச்சிக்கலையும், வயிறு உப்புசத்தையும் உணர்கிறது. இதனாலும் ஒருவருக்கு குறட்டை ஏற்படலாம்.
வெயிலில் நடப்பது, நீண்ட தூர பயணங்களை இரு சக்கரவாகனத்திலும்
பஸ்ஸிலும் செய்வது, மனதில் ஏற்படும் பல வகையான கவலைகள், அதிக பட்டினியிருத்தல், போன்ற செயல்களும் குறட்டையை ஏற்படுத்தலாம்.
இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால்
பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்து
விடுகின்றது. இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்து
விட்டு தவிக்கின்றனர்.
இன்றைய சிறுவர், சிறுமியர்கள், இளம்தலைமுறையினர் பலரும் மைதானங்களுக்குச்
சென்று விளையாடுவதில்லை. பள்ளி சென்று வந்தவுடன் வீட்டிலேயே அடைந்து கிடப்பது, ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்ப்பது, கம்ப்யூட்டரில் விளையாடுவது-வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது போன்றவைகளால் இளைய தலைமுறையினரும் உடல் பருமனாகி
வருகின்றனர். எதிர்காலத்தில் அவர்களும் குறட்டையால் பாதிக்கப்படும் சூழல்
உருவாகிறது.
குறட்டை வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.
குறட்டையை நிறுத்துவதற்கு தேன் ஒரு சிறந்த உணவாக
உள்ளது. எரிச்சல்களையும் மற்றும் நுண்ணுயிரிகளையும் வர விடாமல் தேன் தடுக்கின்றது.
இதனால் மூச்சு குழாயில் உள்ள அடைப்புகள் சரியாகி தொண்டையில் உள்ள அடைப்புகள் சரி
செய்யப்படுகின்றன
குறட்டை பிரச்சனை உள்ளவர்கள்
சிக்கன்,மட்டன்,போன்ற உணவுகளை தவிர்த்து மீனை உணவில் சேர்த்து கொண்டால் குறட்டை
விடுவதை கட்டுபடுத்த முடியும்.
நம் உணவில் சேர்க்கப்படும் மற்ற எண்ணெய்களை விட
ஆலிவ் எண்ணெய் சேர்த்து சமைத்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கட்டுபடுத்தலாம்..
டீயுடன் சிறதளவு தேன்,எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தினால் குறட்டையை அறவே நிறுத்த
முடியும். தொண்டையில் உள்ள அடைப்புகளையும், நெருடல்களையும் நீக்கும் சிறந்த பானமாக டீ
உள்ளது. அதனால் குறட்டையும் வராமல் தவிர்க்கப்படுகிறது.
உங்களுக்கு குடிக்கும் பழக்கம் இருந்தால்
நிச்சயம் எந்த ஒரு மருந்தும் குறட்டையை குறைக்க உதவாது. மது உங்களது நரம்பு
மண்டலத்தை பாதித்து குறட்டை வருவதை அதிகபடுத்தும்.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான குடி நீரில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடியைப் போட்டுக்
கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகலாம்.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும்
பருகலாம். (மஞ்சள் தூள் கலப்படமின்றி சுத்தமாக தயாரிக்கப்பட்டதாக இருந்தால்
நல்லது).
மேலும், படுக்கும்போது தலையணை பயன்படுத்தாமல் சாதாரணமாக
படுப்பதற்குப் பதிலாக, சற்று அதிக அளவில் தலையணைகளைப் பயன்படுத்தி
தூங்கினால் குறட்டையை தவிர்க்கலாம்.
இரவில் தூங்கச் செல்லும் முன் பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே, கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.
இந்த வழிமுறைகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டால்
குறட்டை வருவதை தவிர்த்து நாமும் நிம்மதியான தூங்க வழி வகுக்கும்.