பெண்கள் எந்த நாளில் தாலி கயிற்றி மாற்றலாம்
திருமணமான ஒரு பெண்ணிற்கு மிக மிக முக்கியமாக கருதப்படுவது அவளின் மாங்கல்யம் தான்.உற்றார், உறவினர், சொந்தம், பந்தம் ஆகியோரின் ஆசிர்வாதத்தோடு,ஹோமம் வளர்த்து,மங்கள மந்திரங்கள் சொல்ல,மங்கள வாத்தியம் முழங்க, தெய்வ சாட்சியாக பெண்ணின் கழுத்தில் கட்டப்படுவது தான் தாலி.
தாலி கட்டிய பின் தான் அந்த பெண்ணிற்கு மனைவி என்ற அந்தஸ்தும், ஆணிற்கு கணவன் என்ற அந்தஸ்தும் கிடைக்கிறது.
மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது தான் சிறப்பு என்று நம் முன்னோர்கள் சொல்லிருக்கிறார்கள்.அனால் இன்றைக்கு சிலர் தங்கத்தில் தாலி அணிகின்றனர்.
மஞ்சள் கயிற்றில் தாலி அணிவதில் என்ன சிறப்பு என்றால்,அந்த கயிறு 16 இழைகளை கொண்டு செய்யப்பட்டதாகும்.அந்த16 இழைகளும் 16 செல்வங்களை குறிப்பதாகும்.
அதுமட்டுமல்லது மஞ்சள் கயிற்றில் தாலி அணிந்திருந்தால் நம் தினமும் குளிக்கும் போது நம் மாங்கல்யதிற்கும் மஞ்சள் பூசி குளித்து வர வேண்டும்.அவ்வாறு செய்வதால் நமக்கு அழகும் கூடும்,நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
தாலி கயிறு மாற்றும் போது செய்ய வேண்டியவை
- தாலி கயிறு மாற்றுவது திங்கள்,செவ்வாய்,வியாழகிழமை இந்த மூன்று கிழமைகளில் தான் மாற்ற வேண்டும்.அதுதான் சிறந்ததும் கூட.
- மாங்கல்யம் மற்றும் மாங்கல்ய கயிறை ராகு மற்றும் எமகண்ட காலங்களில் மாற்ற கூடாது.
- தாலியை மாற்றும்போது பூஜை அறையில் கிழக்கு பார்த்து உட்கார்ந்து மாற்றவேண்டும்.
- காமாட்சி விளக்கினை ஏற்றி வைத்து அதற்க்கு மஞ்சள்,குங்குமம்,பூ வைத்து வணங்கி பின்னர் மாற்றுவது நல்லது.
- பழைய தாலியை கழற்றுவதற்கு முன்னர் வேறொரு மஞ்சள் கயிற்றில் மஞ்சளை கட்டி கழுத்தில் கட்டி கொண்ட பின்னரே பழைய தாலியை கழற்ற வேண்டும்.
- மேலும் மாங்கல்யம் மற்றும் மாங்கல்ய கயிறுகளில் அழுக்கு சேராமல் பார்த்து கொள்ள வேண்டும்.
- அழுக்கான அல்லது பழுதடைந்த தாலி அணிந்திருந்தால் குடும்பத்திற்கு நல்லதல்ல.
- தினமும் பெண்கள் குளித்து முடித்தவுடன் கடவுளை வணங்கிய பின் தாலியிலும்,நெற்றியிலும் குங்குமம் வைக்க வேண்டும்.
- இவற்றை கடைப்பிடித்து நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து வந்தால் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்று ஐதீகம்..