கருஞ்சீரகம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்
பாரம்பரிய
மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கியமான விதைதான் கருஞ்சீரக
விதை.கருஞ்சீரகம் பழங்காலம் முதல் வாசனைத் திரவியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மிகப் பழைமையான ஹீப்ரு மொழியில் கருஞ்சீரகம் பற்றிய விளக்கங்கள்
பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பிளின் என்ற
புகழ் பெற்ற பழங்கால மருத்துவ நிபுணர் தனது நூலில் கருஞ்சீரகத்தைப் பற்றியும் அதன்
மறுத்துவக் குணங்கள் பற்றியும் விளக்கிக் கூறியுள்ளார். சுமார் 3,300 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த விதை
எகிப்திய மக்களால் பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.
கருஞ்ஜீரகத்தால் ஏற்படும் மாற்றங்கள்
- கருஞ் சீரகத்தை நல்லெண்ணையில் அரைத்து, சரும நோய்களான கரப்பான், சிரங்கு, இவற்றுக்கு பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும். சினைப்பு, கட்டிகள் கொப்பளங்கள் - இவற்றுக்கும் நல்ல மருந்து.
- 2 ஸ்பூன் கருஞ்சீரகத்துடன் பசும்பால் சேர்த்து நன்கு மைய அரைத்து முகத்தில் பூசி ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பரு மறைந்து முகம் பளிச்சிடும்.
- தலை முடி கொட்டுதல், இளவயதில் தலை முடி நரைத்தல் உள்ளவர்கள் கருஞ்சீரக எண்ணெய்யை நன்கு தேய்த்துவருவதால் இதனைத் தடுக்கமுடியும்.
- இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணை பாக்டீரியாக்களை அழிக்கும். Micrococcus Pyrogenes, Escherichia Coli இவற்றை நீக்கும்.
- லேசான ஜூரங்களுக்கு நல்ல மருந்து. தலைவலி, கீல் வீக்கம் இவற்றுக்கு விதைகளை வெந்நீரில் இட்டு அரைத்து பூசலாம்.
- இதன் பொடியை தேன் (அ) நீரில் கரைத்துக் கொடுக்க மூச்சு முட்டல் நீங்கும். மோரில் சேர்த்து கொடுத்தால் விக்கல் நிற்கும்.
- ஆயுர்வேத ஆசான் சுஸ்ருதர், இதன் விதைகளை மற்ற மருந்துகளுடன் சேர்த்து, பாம்பு, தேள்கடிகளுக்கு பயன்படுத்தலாம் என்கிறார்.
- யுனானி மருத்துவத்தில், நுரையீரல் கோளாறுகள், இருமல், காமாலை, கண்நோய்கள், ஜூரம், மகளிரை பூப்படைய செய்வதற்கு முதலியவற்றுக்கு, கருஞ்சீரகம் பயன்படுத்தப்படுகிறது.
- சித்த வைத்திய பாடல் ஒன்று சொல்வது "கருஞ்சீரகத்தான் கரப்பனோடு புண்ணும் வருஞ்சிராய் பீநசமு மாற்றும் - அருந்தினால் காய்ச்சல் தலைவலியுங் கண் வலியும் போமுலகில் வாய்ச்ச மருந்தெனவே வை”
- குடல் புழுக்களையும் கருஞ்சீரகம் நீக்கும்.
- இதன் பொடியை வைத்தியரின் அறிவுரைப்படி 3 (அ) 7 நாட்கள் உபயோகிக்க வெறிநாய் கடியின் நஞ்சு தீரும்.
- உணவுக்கு பயனாகும் எண்ணைகளின் தயாரிப்பில் கருஞ்சீரகம் எண்ணை ஒரு நிலை நிறுத்தும் பொருளாக (Stabilizing agent) பயனாகிறது.
- பட்டு, கம்பளி ஆடைகளின் மடிப்புகளில் கருஞ்சீரகம் விதைகளை போட்டு வைத்தால் பூச்சிகள் தாக்காது.
- ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.
- கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் வயிற்று இருக்கும் கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது.
- கருஞ்சீரகம் உடலில் ஏற்படும் நோய்த் தொற்றினை தவிர்த்து குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கிறது.
- பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் அதிகபடியான உதிரபோக்கினை கட்டுபடுத்த கருஞ்சீரகம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
- கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து தூள் செய்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து மாதவிடாய் ஏற்படும் நேரத்தில் சாப்பிட்டு வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
- பிரசவத்திற்கு பின்பு கருப்பையில் உள்ள அதிகப்படியான அழுக்கு மற்றும் உதிரத்தை நீக்க குழந்தை பிறந்ததில் இருந்த தினமும் ஒரு ஸ்பூன் கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.