தினமும் வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
நம் எல்லோருடைய வீட்டு அஞ்சரை பெட்டியிலும்
இருக்கும் ஒரு பொருள் வெந்தயம்.வெந்தயம் உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு
வகிக்கிறது.அதனால் தான் நம் முன்னோர்கள் வயிற்று வலி என்றவுடன் சிறதளவு வெந்தயம்
எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட சொல்வார்கள்.
அனால் வெந்தயத்தை அப்படியே சாப்பிட சிலருக்கு
பிடிக்காது.அவர்கள் வெந்தயத்தை ஒரு டீயாக தயாரித்து குடிக்கலாம்.நம் உணவு முறையில்
வெந்தயத்திற்கு ஓர் முக்கிய இடம் உண்டு.
தினமும் நாம் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த
வெந்தய டீயை குடித்து வந்தால் உடல் சூட்டினால் ஏற்படும் அணைத்து நோய்களும் பறந்து
போய் விடும்.
வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.
பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய
டீயைக் குடிப்பது மிகவும் நல்லதகும்.இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத்
தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கவும்
வெந்தய டீ பயன்படுகிறது.
வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும்.
ஆகவே மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடித்து
வந்தால் நல்லது.
வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை
கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
முடி உதிரும் பிரச்சனை உள்ளவர்கள் தினமும்
வெந்தய டீ குடித்து வருவதன் மூலம் முடி உதிர்வு நின்று அடர்த்தியான முடி வளரும்.
வெந்தய டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
- மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலியால் மிகவும் அவதிபடுவார்கள்.இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.
- ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.
- கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்
- வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.
- வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
வெந்தய டீ எப்படி தயாரிப்பது ?
வெந்தயத்தை முதல் நாள் இரவு நீரில் ஊறவைத்து விட
வேண்டும் .
காலையில் அந்த நீரை வடிகட்டி அதில்
தேயிலை,இஞ்சி,தேன் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.