மீன் உணவு வகைகளை நம் சாப்பிடுவதால் கண் பார்வை நன்றாக தெரியும்,அதுமட்டுமல்லாது மீனில் உள்ள மீன் எண்ணெய் மூட்டு வலி,இதய நோய் போன்றவை வராமல் தடுக்கிறது.
தேவையான
பொருட்கள்
- மீன் - 5 துண்டுகள்
- தக்காளிப் பழம் - 2
- வெங்காயம் - 3
- பச்சை மிளகாய் - 2
- பூண்டு – 10 பல்
- இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன்
- புளிக் கரைசல் - 1/2 கப்
- கடுகு – 1ஸ்பூன்
- பெருஞ்சீரகம் - ½ ஸ்பூன்
- வெந்தயம் – 1ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
- தேங்காய் பால் - 1 கப்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- தயிர் – 1 ஸ்பூன்
- சீரகம்,மிளகு,பூண்டு அரைத்து - 1 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
- முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைத்து கொள்ளவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடானதும் கடுகு, சீரகம்,வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
- பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் பூண்டு, கறிவேப்பிலை,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- வதங்கியதும் மிளகாய் தூள் ,உப்பு,கரைத்து வைத்துள்ள புளிக் கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும் மீனை சேர்க்கவும்.
- மீன் பாதி வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து மூடி விடவும்.
- மீன் வெந்து குழம்பு நன்கு கெட்டி பதத்திற்கு வந்ததும் கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான யாழ்ப்பாண மீன் குழம்பு ரெடி...