-->

ஒரே ஒரு மருந்தில் அனைத்து வலிகளில் இருந்தும் விடுதலை வேண்டுமா ?



திரிபலா சூரணம் செய்முறை

உடலின் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக் கூடிய ஒரே மருந்து


நாம் தினசரி செய்யும் வேலைகளை சரி வர செய்ய உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் இருப்பது அவசியாகும்.அதற்கு நம் உடலையும்,உள்ளதையும் கட்டுபாட்டோடு வைத்துக் கொண்டாலே போதும்.

முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம்.

நம் உடலையும் உள்ளதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க திரிபலா சூரணம் மிகவும் உதவுகிறது.

திரிபலா என்பது  என்ன?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு. உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவர்களால், பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தைப்போல் எந்த ஒரு நோயையும் தீர்க்கும் அற்புதச் சக்தியைப் பெற்றுள்ளது.

திரிபலா நமக்கு எந்த வகையில் பயன்படுகின்றது

  • வறட்டு இருமலினால் அவதிப்படுவோர்கள் சிறிதளவு திரிபலா சூரணத்தை வெந்நீருடன் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • வயிற்றுவலி,நெஞ்செரிச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள்,ஒரு கிராம் அளவு சூரணத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் நலம் பெறலாம்.
  • மலச்சிக்கலுக்கு இரண்டு கிராம் சூரணத்தை,வெந்நீருடன் கலந்து இரவு தூங்கும் முன் பருகி நிவாரணம் பெறலாம்.
  • மலம் கழிக்கையில் இரத்தம் வருதல்,பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு,பௌத்திர நோயில் காணும் சலம் இவற்றிற்கு,1-2 கிராம் அளவு சூரணத்தை தேனுடன் கலந்து காலை-மாலை உண்ண நோய் நீங்கி நலம் பெறலாம்.
  • ஆரம்ப நிலை சர்க்கரை நோயர்கள்,பரம்பரையில் சர்க்கரை நோயுள்ளவர்கள், மூன்று கிராம் அளவு சூரணத்தை வெந்நீருடன் கலந்து காலை,மாலை பயன்படுத்தினால் சர்க்கரை நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
  • உடற்பருமனை குறைக்க விரும்புபவர்கள்,காலை மாலை உணவிற்கு முன் ஒரு கிராம் அளவு சூரணத்தை சுடுநீருடன் கலந்து பருகலாம்.
  • 50 வயதுக்கு மேற்பட்டோர்,நோய் வராது தடுக்கும் காயகற்ப மருந்தாக திரிபலா சூரணத்தை மாலையில் உணவிற்கு முன் ஒரு கிராம் அளவு சுடுநீருடன் கலந்து பருகலாம்.
  • முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.
  • இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.
  • வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றுப்புண்ணை ஆற்றும். அல்சரை கட்டுப்படுத்தும்.
  • ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்கிறது. ரத்தசோகையை சரிசெய்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
  • கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் குளூகோஸின் அளவை சமநிலைப்படுத்தி சர்க்கரையை நோயை கட்டுபடுத்த உதவுகின்றது.
  • உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.
  • ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.
  • மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும். சுவாசப் பாதையில் உள்ள சளியைப் போக்க உதவும்.
  • உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.
  • பற்பொடியாக பயன்படுத்த,பற்கூச்சம்,பல்வலி,ஈறுவீக்கம் குணமாகும்.
  • நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்று வலி, குஷ்டம், இளைப்பு, தொண்டை நோய், புண், கண்நோய், வாதம், வயிற்றுப் புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்துகிறது.
  • திரிபலா சூரணத்தைத் தினமும் சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரணக் கோளாறு நீங்கும், ரத்தம் சுத்திகரிக்கப்படும், ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது.
  • காலில் வெடிப்பு இருந்தால், இரவு படுக்கைக்குப் போகும் முன்பு, சுடுநீரில் திரிபலா சூரணத்தைக் கலந்து, வெதுவெதுப்பான சூட்டில் பாதத்தை 20 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கலாம்.

திரிபலா சூரணம் தயாரிக்கும் முறை

  • கடுக்காய் தோல் – 100 கிராம்
  • நெல்லி வற்றல் -  100 கிராம்
  • தான்றிக்காய் தோல் - 100 கிராம்
மூன்றையும் தனித்தனியாக பொடி செய்து சலித்து,சம அளவு எடுத்து கலந்து கொண்டால் திரிபலா சூரணம் தாயார்.

Previous Post Next Post