-->

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?


உடலின் பல்வேறு நோய்களை குணமாக்க தொப்புளில் எண்ணெய் வைக்க வேண்டும்.


தொப்புளில் ஏன் எண்ணெய் வைக்க வேண்டும்?

தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள்,முடி உதிர்தல்,உதடுகள் வெடிப்பு, முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகள் போன்றவை ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது.

ஒரு தாய் கருவுறும்போது அந்த கருவில் முதலில் உருவாவது தொப்புள் பகுதி தான்.அந்த தொப்புள் கொடி தான் தாயக்கும் சேய்க்கும் பிணைப்பை ஏற்படுத்துகிறது.தொப்புளில் எண்ணெய் வைப்பதால் வறட்சியாக இருக்கும் நரம்புகளுக்கு சென்று அதை சரி செய்ய பயன்படுகிறது.

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலி ஏற்பட்டால் உடனே நம் முன்னோர்கள் தொப்புளை சுற்றி எண்ணெய் தடவி விடுவார்கள் உடனே குழந்தைக்கு வயிற்று வலி நின்றுவிடும்.

அதற்க்கு காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. இதனால் தொப்புள் பகுதி எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
மேலும் நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக கருதப்படும் வயிற்றின் தொப்புள் பகுதிக்கு பின் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்ற ஒன்று அமைந்துள்ளது.

எனவே நம் உடலின் முக்கிய பகுதியான  தொப்புள் பகுதியில் உள்ள நரம்புகள் வறண்டு போகாமல் இருக்க  எண்ணெய்களை கொண்டு அடிக்கடி மசாஜ் செய்ய வேண்டும்.

தொப்புளில் எந்த எண்ணெய் வைத்தால் நன்மை தரும் 

தேங்காய் எண்ணெய்

இரவில் தூங்குவதற்கு முன், தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டுகள் விட்டு தொப்புளை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சனைகள் போன்றவை குணமாகிறது.

ஆமணக்கு எண்ணெய்

தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்து வந்தால் சரும பிரச்சனை ,முடி உதிர்தல் போன்றவை ஏற்படாது.

கடுகு எண்ணெய்

தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு  வைத்து மசாஜ் செய்தால் பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் போன்ற நன்மைகளும் முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை ஆகிய பிரச்சனைகளை போக்கவும் உதவுகிறது.
Previous Post Next Post