எந்த ராசிக்காரர்கள் எந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நோய் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.
அறுசுவை உணவுகளை
அளவோடு உண்டால் நோய் தாக்கத்திலிருந்து தப்பித்து விடலாம்.உணவில் பல்வேறு சுவைகள்
உண்டு.அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கும்.சிலருக்கு காரமான உணவு
சாப்பிட பிடிக்கும், சிலருக்கு
இனிப்பான உணவு பிடிக்கும். சிலருக்கு சூடாக சாப்பிட பிடிக்கும், சிலருக்கு ஜில்லென்று ஆறிய உணவு பிடிக்கும்.
ஒவ்வொரு ராசிக்கரர்களுக்கும் வெவ்வேறு சுவையுள்ள
உணவுகள் பிடிக்கும்.சாப்பிடும் உணவின் சுவை ராசி,நட்சத்திரம்,லக்னத்தை பொறுத்து
மாறுபடும்.”உணவே மருந்து மருந்தே
உணவு” என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
மருந்தாகிய அந்த
உணவை அந்தந்த ராசிகேற்ப நாம் சாப்பிட்டு வந்தால் நோய் தாக்கத்திலிருந்து
தப்பிக்கலாம்.
மேஷம்
நேர்மையை
விரும்பும் மேஷ ராசிக்காரர்களே அதிக வெப்பமான உடல் வாகை பெற்றவர்களாக
இருப்பீர்கள்.எனவே அதிக காரம்,மசாலா நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
கீரை
வகைகள்,பழங்கள்,தானிய உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.நொறுக்குத் தீனி
சாப்பிடுவதில் ஆர்வமாக இருப்பார்கள். நோயிலிருந்து தப்பலாம்.
துரித
உணவுகள்,மது,போதை பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.அதிக சூடான உணவுகளை தவிர்க்கவும்.
ரிஷபம்
வசிகீர தோற்றம்
கொண்ட ரிஷப ராசிகாரர்களே உங்களுக்கு ஜீரண
சக்தி மிகவும் குறைந்தே காணப்படும்.எனவே கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவுகளை
தவிர்த்து விடுவது நல்லது.எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளே உடலுக்கு ஆரோக்கியம்
தரும்.
பீட்ரூட்,வெள்ளரிக்காய்,பூசணிக்காய்,வெங்காயம்,முள்ளங்கி,காலிப்ளவர்,வாழைபழம்,அன்னாசிபழம்,
போன்றவற்றை உண்டால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு நோய் வராமல் தடுக்கலாம்.
மிதுனம்
எதையும்
எதிர்த்து சமாளிக்கும் மிதுன ராசிக்காரர்கள் சாப்பாட்டில் ஆர்வம் உள்ளவர்களாக
இருப்பார்கள்.இவர்கள் ப்ளம்ஸ் பழம்,கீரை வகைகள்,முள்ளங்கி,பழங்கள்,மலை வாழைபழம்,தயிர்,பால்
உணவுகள்,ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாய்வு
சம்பந்தமான பிரச்சனையை ஏற்பட வாய்ப்புள்ளதால்,உருளை கிழங்கு,வாழைக்காய்,முட்டை
போன்ற உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.அதிக இனிப்பு ஆபத்தை விளைவிக்கும்.அதையும்
அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.
கடகம்
சிந்தனை திறன்
அதிகம் உள்ள கடக ராசிக்காரர்கள் அதிக எண்ணெயில் பொறித்த உணவுகளை எடுத்துக் கொள்வதை
தவிர்க்க வேண்டும்.கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
கோதுமை,சம்பா
கோதுமை,சிவப்பு அரிசி,கடல் உணவுகள்,ஓட்ஸ் போன்றவற்றை அதிகம் எடுத்துக்
கொள்ளலாம்.உப்பும்,சர்க்கரையும் அளவோடு சாப்பிடுவது ஆரோக்கியத்தை தரும்.
சிம்மம்
யாரையும்
எதிர்பார்க்காமல் சுயம்புவாக இருக்க நினைக்கும் சிம்ம ராசிக்காரர்கள் உடல்
சூட்டினால் பாதிப்படைய நேரிடும்.எனவே சூட்டை அதிக படுத்தும் உணவை தவிர்ப்பது
நல்லது.
சாத்துக்கொடி,மாதுளை,ஆரஞ்சு,கீரைகள்,பால்
பொருட்கள்,பயிறு வகைகள்,உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை தரும்.வாரம் ஒரு முறை
எண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு நன்மை தரும்.
கன்னி
தனிதன்மையோடும்,இறக்க
குனத்தொடும் செயல்படும் கன்னி ராசிகாரர்கள் வேக வைத்த காய்கறிகள்,பழ சாறுகள்,சூப்
வகைகள் போன்ற உணவுகளை இடைவெளி விட்டு
விட்டு சாப்பிடலாம்.
மாமிச உணவுகளை
தவிர்ப்பது நல்லது.இனிப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.வெதுவெதுப்பன உணவுகள்
உடலுக்கு நலன் தரும்.
துலாம்
எப்போதும்
குதுகலத்துடன் காணப்படும் துலாம் ராசிக்காரர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க இரும்பு
சத்து நிறைந்துள்ள பொருட்களை சாப்பிட வேண்டும்,தானியங்களை அதிக அளவில் சாப்பிட
வேண்டும்,
பாட்டில்களில்
அடைத்து வைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது .அதிக இனிப்பை தவிர்க்க
வேண்டும்.முந்திரி,பாதம்,உலர்ந்த திராட்சை,உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால்
நல்லது.
விருச்சிகம்
முன் கோபம்
அதிகம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே உப்பு,இனிப்பு,காரம் இவை மூன்றையும்
குறைத்துக் கொண்டால் உங்கள் உடல் ஆரோக்கியமடைவதோடு, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க
உதவும்.
வீட்டில்
தயாரிக்கப்படும் உணவை சாப்பிடுவதே சிறந்தது.குறிப்பாக வெளியில் அசைவ உணவு
சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
தனுசு
சுயமரியாதையோடு
வாழ நினைக்கும் தனுசு ராசிக்காரர்களே நீங்கள் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களாக
இருந்தால் காலை உணவை கண்டிப்பாக சாப்பிட தவறக் கூடாது.
அதே நேரம்
மிகவும் காரமான உணவையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.உணவில்
காய்கறிகள்,பழங்கள்,குறைவான கொழுப்பு சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.நீண்ட
நேரம் கண் விழித்து வேலை பார்ப்பதை தவிர்க்கவும்.
மகரம்
நினைத்ததை
முடித்து காட்டும் வல்லமை பொருந்திய மகர ராசிகாரர்களே நீங்கள் உங்கள் உணவில்
தானியங்களை சேர்த்துக் கொள்வது நல்லது.
பால்
பொருட்கள்,இனிப்புகள், கார உணவுகளை அளவோடு சாப்பிட வேண்டும்.குளிர் பானங்களை
முற்றிலும் தவிர்த்து விடவும்.ஏனென்றால் காது,மூக்கு,தொண்டை தொடர்பான பிரச்சனை
ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
அமைதியாக இருந்து
காரியத்தை சாதிக்கும் கும்ப ராசிகாரர்களே நீங்கள் குளிர்ந்த உணவுகளை சாப்பிடுவதை
தவிர்க்கவும்.அதிக குளிர்ச்சி ஆபத்தை ஏற்படுத்தும்.
சரியான
நேரத்திற்கு உணவு உண்பதே உங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.முள்ளங்கி,கீரை
வகைகள் ,பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது.
மீனம்
எந்த பிரச்சனை
வந்தாலும் எதிர்த்து நிற்க கூடிய மீன ராசிகாரர்களே நீங்கள்
பால்,தயிர்,மோர்,வெண்ணெய் போன்ற பால் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது நன்மை தரும்.
வேக வைத்த
உணவுகள்,பழங்கள்,பாதம்,முந்திரி,போன்றவை உடலுக்கு நன்மை தரும்.மது போதை
போன்றவற்றால் மிகவும் பாதிப்படைய நேரிடும்,எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.