40 வயதை கடந்தவர்களுக்குகான பதிவு
40 வயது ஆனாலே நம்மில்
பலருக்கு ஒவ்வொரு நோயாக எட்டி பார்க்க ஆரம்பித்துவிடும். டாக்டர், மாத்திரை,
மருந்து என அலைபவர்கள் பலர். ஆனால் கீழ்காணும் இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் 40
வயதோ அல்லது அதற்கு மோலோ ஆனாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் என்றும்
இளமையாக இருக்கலாம்.
அதற்க்கு நீங்கள்
இஞ்சி, சுக்கு, போன்ற பொருட்களை எதோ ஒரு வடிவில் உங்கள் உண்ணும் உணவில் சேர்த்துக்
கொண்டால் எந்த நோயும் உங்களுக்கு வரவே வராது.
இஞ்சி
இஞ்சி ஒரு ஜீரண
பெருக்கி. இது உணவுக்கு ஒரு மணத்தை கொடுப்பதோடு ஜீரண உறுப்புகளை தூண்டி நாம்
உண்ணும் உணவை செரிக்க வைக்கிறது.
சுக்கு
இஞ்சியை நன்றாக
காய வைத்த நீர் வற்றி வறண்ட நிலையில்
இருப்பதுதான் சுக்கு.
சுக்கை நமது முன்னோர்கள் பண்டைய காலம் தொட்டே உணவில் பயன்படுத்தி வருகின்றனர். சுக்கு எந்த வகையான உணவையும் செரிக்க வைத்துவிடும். நச்சுக்களை அறவே முறித்துவிடும். நமது குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும். அத்தகைய சுக்கை எந்த வழிகளில் எல்லாம் நாம் நமது உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தலாமென இங்கு பார்ப்போம்.
தீராத தலைவலிக்கு
உங்களுக்கு தீராத தலைவலி இருந்தால், சுக்கை நீரில் உரசி அதை நெற்றியில் பற்றாக போட்டால் போதும். சில நிமிடங்களில் தலைவலி இருந்த இடம் மறைந்துவிடும். சிலர் தலைவலிக்கு தைலத்தை பயன்படுத்துவர். ஆனால் தைலத்தை விட சிறந்த மருந்து சுக்காகும்.
அஜீரணப் பிரச்சனை
உங்களுக்கு அஜீரண பிரச்சனை, வயிற்று உப்பசம், வயிற்று பெருமல், புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டால் 1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து, நீரில் 1 தேக்கரண்டி சுக்குப் பொடியை கலந்து உடனே மூடி வைத்திடுங்கள். ஆறிய பின் வெதுவெதுப்பாக உள்ள அந்த நீரில் தேன் அல்லது சர்க்கரையை சேர்த்து குடிக்க வேண்டும்.
இதனால் வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல், குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் வலி, போன்றவை இருந்த இடம் தெரியாமல் விலகி ஓடும்.
வாய் துர் நாற்றம்
சிலருக்கு வயிற்று பிரச்னை இருந்தாலே வாயில் துர்நாற்றம் உண்டாகும். அதனால் இவர்கள் சிலருடன் பேசவே தயங்குவர். அப்படிபட்டவர்கள் சுக்குப்பொடியை உப்புடன் சேர்த்து தினமும் காலையில் பற்களை துலக்கலாம். மேலும் ஈறுகளையும் இந்த பொடிக் கொண்டு மசாஜ் செய்வது போல செய்தால் பல் கூச்சம், பற்சொத்தை ஏற்படாமல் தடுக்கும். கடுமையான பல் வலி குறையும். வாய் துர் நாற்றம் பிரச்சனை குணமாகும்.
வாய்வு பிடிப்பிற்கு
இன்றைய நவீன காலத்தில் நாம் உண்ணும் உணவுகளே இந்த வாய்வு பிரச்சனைக்கு முக்கிய காரணம். சிலர் எழுந்தாலோ, உட்கார்ந்தாலோ வாய்வின் காரணமாக சிரமப்படுவர். சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாதபோதும், மன அழுத்தம் இருக்கும்போதும் வாய்வு பிடிப்பு உண்டாகும். அந்த சமயத்தில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம். கண்ட மாத்திரைகள், மருந்துகளை வாங்கி சாப்பிடாமல் இயற்கை முறையில் இந்த பிரச்சனையை சரி செய்யலாம்.
நோயில்லாத வாழ்வு
வாரத்திற்கு ஒருநாள் சுக்குப் பொடியை நீங்கள் சமைக்கும் குழம்பில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் இல்லாமல் வாழலாம். முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று நாம் உண்ணும் உணவில் சுக்கை சேர்த்து வந்தால் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் தடுக்கலாம்.
மூட்டு வலி
40 வயது ஆனலே நமக்கு வரும் பெரும் பிரச்சனை ஒன்று மூட்டு வலி. இதனால் அன்றாட வேலைகளை கூட செய்ய முடியாமல் அவதிபடுபவர்கள் பலர். சில சமயம் உட்கார்ந்து எழுந்து கொள்ள முடியாதபடி சிரமப்படுவர். அப்படிபட்டவர்கள் சுக்கை தட்டி பாலுடன் சேர்த்து அரைத்து மூட்டுகளுக்கு பற்று போல் போட்டு வந்தால் தீராத மூட்டு வலியிலிருந்து குணம் பெறலாம்.
கபம் கரைய
சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை, ஆகியவற்றை தனித்தனியாக வாங்கி பொடி செய்து அல்லது இந்த ஐந்தும் கலந்த பொடியை நாட்டு மருந்து கடையில் வாங்கி அதனை வெந்நீரில் காய்ச்சி குடித்தால் கடுமையான சளி மற்றும் கபம் விலகும்.
வயிற்றுப் பூச்சிகள் அழிய
சுக்குப் பொடியை அல்லது சுக்கை வெங்காயத்துடன் அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள புழு, பூச்சிகள் அழிந்துவிடும். உடலிலுள்ள நஞ்சுகள் வெளியேற்ற உதவும்.
சுக்குக் காபி
தினமும் சுக்குக் காபி குடிப்பதால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். அஜீரணப் பிரச்சனைகள் நீங்கும். மலச்சிக்கல் குணமாகும். மந்தத்தன்மை மறையும்.
விஷக்கடிகள் குணமாகும்
தேள், வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியாக ஒரு வெற்றிலையில் சுக்கு, 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் பூச்சு கடியின் விஷத்தன்மையை முறிக்கலாம்.
மேலே சொன்ன
வழிமுறைகளை கடைபிடித்தால் எவ்வளவு வயது அனாலும் நாம் என்றும் இளமையாக இருக்கலாம்.
நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம் என முன்னோர்கள் சொல்வார்கள். அப்படிபட்ட நோயில்லாத வாழ்வை பெற நமது
முன்னோர்கள் வகுத்து கொடுத்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவோம். ஆரோக்கியமான வாழ்வு
வாழ்வோம்.