நோய்களை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் மற்றும் நோயே வராமல் தடுக்கவும், உணவு முறைகள் மூலமே ஆரோக்கிய வாழ்வினை பெற முடியும்.
”உணவே மருந்து மருந்தே உணவு “
என்று நம் முன்னோர்கள் சொன்னது உண்மைதான்.நாம் உண்ணும் உணவு தான் நம் உடலுக்கு
சக்தியை அளிக்கிறது.மருந்தாகவும் பயன்படுகின்றது.
எல்லா நோய்களுக்கும் மருந்து நம்
வீட்டிலேயே இருக்கிறது.ஆனால் நாம் ஒரு சிறு தலைவலி என்றால் கூட மருத்துவமனைக்கு
செல்கிறோம்.இனி அதனை தவிர்த்து இயற்கை முறையில் செலவே இல்லாமல் நோய்களை
குணபடுத்தலாம்.
மருத்துவமனைக்கே செல்லாமல் நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எப்படி நோயை குணபடுத்தலாம்?
1. மார்பு சளி
தேங்காய்
எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து பின் ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி
குணமாகும்.
2. தலைவலி
கொஞ்சம் துளசி
இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம்,
சேர்த்து நன்கு அரைத்து
நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து
சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய்
இடித்து சாறு பிழிந்து, தேன் கலந்து
சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர்
தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி
குடிக்க அஜீரணம் சரியாகும்.வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
6. உடல் சூடு குறைய
ஜீரகத்தை
தண்ணீரில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து பின் அந்த நீரை வடிகட்டி குடித்து
வர உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியடையும்.
7. வாயு தொல்லை
வேப்பம் பூவை
காயவைத்து நைசாக அரைத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் வாயுதொல்லை நீங்கும்.
ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
8. வயிற்று வலி
வெந்தயத்தை லேசாக
வறுத்து தூள் செய்து மோரில் கலந்து குடித்து வர
தீராத வயிற்றுவலி குணமடையும்.
9. சரும நோய்
ஆரஞ்சுபழ தோலை
நிழலில் உணர்த்தி காயவைத்து பொடி செய்து தினமும் குளிக்கும் போது இந்த பொடியை
கொண்டு தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் விரைவில் குணமடையும்.
10. மூக்கடைப்பு
ஒரு துண்டு
மஞ்சளை விளக்கில் சுட்டு அதன் புகையை மூக்கால் நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி
சுவாசம் புத்துணர்வு பெரும்.
12. கண் எரிச்சல்,
உடல் சூடு
வெந்தயத்தை
இரவில் ஊற வைத்து பின் காலையில் நன்கு அரைத்து தலையின் முடியில் தடவி குளித்து
வந்தால் கண் எரிச்சல் சரியாகி கண் குளிர்ச்சி அடையும்.
13. வயிற்றுக்
கடுப்பு
வயிற்றுக்
கடுப்பு நீங்க சாதம் வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்து வர வயிற்று
கடுப்பு நீங்கி விடும்.
14. பற் கூச்சம்
புதினா இலையை
வாயில் போட்டு மமென்றால் பற் கூச்சம் நீங்கி விடும்.
15. வாய்ப் புண்
வாய்ப் புண்
நீங்க தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்.
17. வயிற்றுப்
பொருமல்
வசம்பை விளக்கில்
சுட்டு அதன் கரியை குழந்தைகளுக்கு தாய்பாலிலும்,பெரியவர்களுக்கு விளக்கெண்ணெயிலும் கலந்து தடவி
வர குணமாகும்.
18. அஜீரணம்
சாதம் வடித்த
நீரில், சிறிதளவு மஞ்சள்
தூளை கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் குறையும்.
19. இடுப்புவலி
சாதம் வடித்த
கஞ்சியை ஆறவைத்து அதில் சிறிது நெய்,சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
20. வியர்வை நாற்றம்
படிகாரத்தை
தண்ணீரில் கலந்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.
22. ஆறாத புண்
மஞ்சளை விளக்கில்
சுட்டு அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து காலி,இரவு என இரண்டு வேளையும் புண்களின் மேல் தடவி
வந்தால் விரைவில் குணமடையும்.
24. மலச்சிக்கல்
வெந்நீரில்
சிறிதளவு கடுக்காய்ப் பொடி சேர்த்து கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல்
ஏற்படாது.
25. கபம்
மிளகை பொடி
செய்து வைத்துக் கொண்டு தினமும் சிறிது தேனில் கலந்து சாப்பிட்டு வர கபம்
நீங்கிவிடும்.
26. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை
நிழலில் உலர்த்தி பொடி செய்து தினசரி ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல்
அதிகரிக்கும்.
27. சீதபேதி
வெந்தயத்தை
தண்ணீரில் ஊற வைத்து அரைத்து தயிரில் கலந்து சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும்.
28. ஏப்பம்
வேப்பம்பூவை பொடி
செய்து 2 சிட்டிகை
எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து சாப்பிட்டால் ஏப்பம் வருவது நின்று விடும்.
29. பூச்சிக்கடிவலி
பூச்சிக்கடியினால்
வலி, வீக்கம் ஏற்பட்டால் சின்ன
வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
31. வயிற்றுப்புண்
பீட்ருட் சாறு
எடுத்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
32. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை
மைய அரைத்து அதோடு சிறிது சீரகத்தையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு தண்ணீர்
குடித்தால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
33. கட்டிகள் குணமாக
கட்டியால் வலி
அதிகமாக இருக்கும் போது கொஞ்சம் சுண்ணாம்பும் சிறிது தேனும் சேர்த்து கலந்தால் வரும் கலவையை அந்த
கட்டியின் மீது போடவும்.
34. வேர்க்குரு
தயிரை உடம்பில்
தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
35. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன்
பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
36. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு
வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு
காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு
ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி
எடுத்து 8 தம்ளர்
தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி
கலந்து குடிக்கலாம்.
37. தாய்ப்பால்
சுரக்க
அரிசியுடன்
வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
38. குழந்தை
வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள்
அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம்
ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
39. எரிச்சல்
கொப்பளம்
நெருப்பு
சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும்
கொப்பளமும் ஏற்படாது.
40. பித்த நோய்கள்
கேரட் சாறும்
சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும்.
பித்த நோய்கள் தீரும்.