-->

கருங்குறுவை கருப்புளுந்து கஞ்சி செய்வது எப்படி ?


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கருப்பு உளுந்து

தோல் நீக்கிய உளுந்தை விட தோல் நீக்கப்படாத கருப்புளுந்து நம் உடலுக்கு அதிக அளவு சக்தியை கொடுக்கிறது.கருப்புளுந்தை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி,கழுத்து வலி போன்ற வலிகள் ஏற்படாது.
தேவையான பொருட்கள்
  1. கருங்குறுவை – 1 கப்
  2. கருப்புளுந்து – ½ கப்
  3. காய்ந்த மிளகாய் – 4
  4. பூண்டு – 10 பல்
  5. ஜீரகம் – ½ ஸ்பூன்
  6. கடுகு – 1 ஸ்பூன்
  7. தேங்காய் துருவல் – 1 கப்
  8. கறிவேப்பிலை – சிறிதளவு
  9. எண்ணெய் – தேவையான அளவு
  10. உப்பு – தேவையான அளவு

செய்முறை
  1. முதலில் கருங்குறுவை அரிசியை 5 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  2. கருப்புளுந்தையும் ஊற வைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  3. குக்கரை அடுப்பில் வைத்து அதில் கருங்குறுவை அரிசி,கருப்புளுந்து இரண்டையும் சேர்க்கவும்.
  4. பின்னர் அதில் பூண்டு,ஜீரகம்,வெங்காயம்,தேங்காய் துருவல்,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 6 விசில் விட்டு இறக்கவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேகவைத்த கஞ்சியில் சேர்க்கவும்.
  6. பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கருங்குறுவை கருப்புளுந்து கஞ்சி ரெடி.



Previous Post Next Post