-->

குதிகால் வெடிப்பு உங்கள் பாதத்தின் அழகை கெடுக்கிறதா?அப்போ இத மட்டும் தடவுங்க

பாதத்தை அழகாக மாற்ற சில எளிய குறிப்புகள் 

பாதவெடிப்பு வந்துவிட்டால் பாதத்தின் அழகே கெட்டு விடும். என்னதான் அழகான உடை,அலங்காரம் என அழகான தோற்றத்தோடு இருந்தாலும் பாதத்தில் உள்ள வெடிப்பு அந்த அழகையே கெடுத்து விடும். இதனால் நம்மை குறைவாகவும் மற்றவர்கள் மதிப்பிடக் கூடும்.
பாத வெடிப்பை சரி செய்ய சில டிப்ஸ்

பாதவெடிப்பு இருந்தால் நமது ஆரோக்கியத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். நம்மால் ஒரு அடி கூட எடுத்து வைத்து நடக்க முடியாது. பாத வெடிப்பு வருவதற்கு முக்கிய காரணம் நாம் நம் பாதங்களை சரியாக பராமரிக்காமல் இருப்பதாகும்.பாதங்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பாதத்தில் அழுக்கு சேர்ந்து முதலில் வெடிப்பு ஏற்படும். அந்த வெடிப்பு மிகவும் வலியை ஏற்படுத்தும். வெடிப்பு பெரியதாகி புண் ஏற்படும்,அந்த புண் மூலமாக நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்க்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான்.

நம் பாதத்தின் அழகை கெடுக்கும் பாத வெடிப்பை சரி செய்ய சில எளிய வழிமுறைகள்


தேன் மற்றும் அரிசி மாவு
பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, தேன் பெரிதும் பயன்படுகிறது. தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்யுங்கள்.
வேப்பிலை பேஸ்ட்
வேப்பிலையை கொஞ்சம் எடுத்து அத்துடன் சுண்ணாம்பு கொஞ்சம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடான நீரில் கால்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும். 15 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.

பப்பாளி ஸ்க்ரப்
பப்பாளியை தோல் நீக்கி நன்கு  மசித்து வைத்து அதை பாலுடன் கலந்து குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் தேய்த்து கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

உருளைக் கிழங்கு 
உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு தூளாக்கி நீரில் கலந்து உங்கள் பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.

வெந்தயக் கீரை
மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில்
தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் மிளிரும். மேலும் கடுகு எண்ணெய் தொடர்ந்து கடுகு எண்ணையை பாதங்களில் தேய்க்க வேண்டும். இது உங்கள் பாதங்களை மென்மையாக்கும்.

வாழைப்பழம்
வாழைப் பழத்தை நன்கு பிசைந்து  உங்கள் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும். பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மறையும்.

வெந்நீர்
தினமும் மாலை நேரத்தில், உங்களது பாதங்களை வெதுவெதுப்பான நீரில் உங்களது பாதங்களை 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் ஸ்கிரப்பர் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை ஊற்றி பாதங்களை வாரம் ஒருமுறை 10 நிமிடம் ஊற வைத்து வந்தால் பாதங்கள் மென்மையுடன் இருக்கும்.

மருதாணி
மருதாணி இலைகள் பாதங்களுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது. மருதாணி இலைகளை நன்றாக அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

தேங்காய் எண்ணெய்
தினமும் இரவு தூங்க போவதற்கு முன்னர் கால்களில் தேங்காய் எண்ணெய்யை தடவிக் கொண்டு உறங்கினால் கால்களில் உள்ள பித்த வெடிப்புகள் சீக்கிரமாக குறைந்து விடும்.


Previous Post Next Post