-->

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நாம் சொல்ல வேண்டிய மூன்று மந்திரங்கள்

ஒரு முறை வாழும் வாழ்க்கை அதில் உண்மையாக இந்த மூன்று சொற்களை சரியான இடத்தில் சரியான நேரத்தில் பயன்படுத்தினாலே போதும் வாழ்வில் எப்பொழுதும் மகிழ்ச்சி அலை பொங்கும்.


மகிழ்ச்சியை கட்டிப்போடும் மந்திர வார்த்தைகள்

  • நன்றி
  • மன்னிப்பு
  • இரக்கம்
முதல் மந்திரம் “நன்றி”
பெரும்பாலான மனிதர்கள் இந்த வார்த்தைகளை பயன்படுதினால் தன் சுயமரியாதைக்கு அவமானம் என்று நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. சுயமரியாதை என்பது வேறு. அதனை யாருக்காவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது. 

ஆனால் நாம் வாழ்வது கூட்டு சமூகத்தில் என்பதை மறந்து விடுகிறார்கள். நமக்கு நேரடியாக இல்லாவிட்டாலும் பலர் மறைமுகமாக நமக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் நமக்காகவும் இந்த வார்தைகளை பயன்படுத்தலாம்.

நாம் சாப்பிடும் உணவகத்தில் சாப்பிடும் போது நமக்கு பரிமாரும் பணியாளருக்கு நீங்கள் கொடுக்கும் டிப்ஸ் தரும் மகிழ்சியை விட நன்றி என்ற ஒரு வார்தைக்கு ஏற்படும் மகிழ்ச்சி தான் அதிகம்.

நமக்காக வேலை செய்யும் அனைவருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.அவர் பணம் வாங்கிகொண்டுதான் செய்கிறார் எதற்கு நன்றி என்று சொல்ல வேண்டும் என்று நினைப்பது தவறு.
மனித உறவையும் அல்லது வேலையையும் பணத்தினால் தீர்மானிக்க முடியாது, அதன்னால் நீஙள் சந்திக்கும் அனைவரிடமும் அன்பாக இருங்கள், முடியும் அளவிற்க்கு ஒரு புன்னகை செய்யுங்கள்.
தினமும் உங்களுக்காக சமைத்து வைக்கும் மனைவிக்கோ அல்லது அம்மாவிற்கோ ஒரு முறையவது நன்றி சொல்லிப்பாருங்கள். நம்மை சுற்றி உள்ள உறவுகள் செய்யும் செயலுக்கு நமக்குப் பிடித்தவர்கள் தான் என்று நன்றி சொல்ல தேவையில்லை என்று நினைப்போம்அவர்கள் அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டர்கள் என்று சுலபமாக சொல்லிவிடுவோம், அது தவறு, நன்றி சொல்லமுடியாவிட்டாலும் பாராட்டவாவது செய்யலாமே.
வேலை செய்யுமிடத்தில் நம்மைவிடக் கீழ் பணியில் இருப்பவர்களிடம் நாம் சொல்லும் நன்றி, அவர்களின் பணி ஈடுபாட்டை அதிகரிக்கும்.
இரண்டாவது மந்திரம் “மன்னிப்பு”
 தவறு செய்வது மனித இயல்பு, யார் வேண்டுமானாலும் தவறு செய்வார்கள். தவறு செய்வது மிகப்பிரிய குற்றம் இல்லை. அனால் அதை தெரிந்தே செய்வது தவறு, அதை விட பெரிய தவறு செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்காமல் இருப்பது தான்.
தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளவர்கள் மட்டும் தான் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கிறார்கள், அதேபோன்று தைரியமும், தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் அறியாமல் பிறர் செய்யும் தவறுகளை மன்னிக்கிறார்கள்.
மூன்றாவது மந்திரம் "இரக்கம்"
ஒருவர் செய்யும் தவறினைச் சுட்டிக் காட்டும் போது அல்லது ஒரு வேலையை செய்ய சொல்லும்போது தயவுடன் என்ற சொல்லைச் சேர்த்து சொல்வதில் உங்கள் இரக்க குணம் தெரியும்.ஒரு வேலையை செய்ய முடியதவர்கள் கூட நீங்கள் கேட்க்கும் விதத்தில் செய்ய நினைப்பார்கள்.
சாலைகளில் சில நேரங்களில் நடைபெறும் சண்டையின் போது சாரி என்ற ஒரு வார்த்தை சொன்னால் போதும் சண்டை போட்டு கொண்டவர்கள் சமாதானம் அடைந்து விடுவார்கள். ஆனால் அந்த சாரி என்ற வார்த்தையை முதலில் யார் சொல்வது என்ற ஈ.கோவில் காத்திருக்காமல் நல்ல மற்றத்தை உங்களிடமிருந்தே தொடங்குங்கள். இதுபோல் சின்ன சின்ன வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

Previous Post Next Post