-->

நாம் உணவை சூடுபடுத்தி சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?



மீண்டும் மீண்டும் உணவை சூடுபடுத்துவதால் உண்டாகும் விளைவுகள்


நிற்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த அவசர காலத்தில் உணவை சமைத்து அந்த உணவு கெட்டு போகாமல் இருக்க ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்ககளை உபயோகித்து வருகிறோம்.

தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து,  ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம்.சில நேரங்களில், ஹோட்டல் உணவை வாங்கி வந்து வீட்டில் வைத்து   சாப்பிடுகிறோம்.

வேலையை குறைப்பதாக நினைத்து தேவைக்கு அதிகமாக சமைத்து சூடுபடுத்தி சாப்பிடுவதால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

இவ்வாறு சாப்பிடுவதால் நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்.சூடுபடுத்தி சாப்பிடுவதால் அந்த உணவில் உள்ள முழுமையான சத்து நமக்கு கிடைக்காமல் போகிறது.

சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள்


  • டீ மற்றும் காபியை மீண்டும் மீண்டும் சூடாக்கி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.காபி-டீயை மீண்டும் சூடேற்றினால்,அதன் சுவை மாறுவதோடு நச்சுத்தன்மை உடையதாக மாறிவிடுகிறது..
  • புரதச்சத்து அதிகம் உள்ள உணவு செரிமானம் ஆவதற்கு நேரம் அதிகமாகும்.உதரணமாக சிக்கன்,மட்டன், போன்றவற்றில் புரோட்டீன்  அதிகமாக உள்ளது. 
  • சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும.அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட்  பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும்.எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.
  • கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதனை சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக மாறும். இது, புற்றுநோயை  உண்டாக்கும்.எனவே,கீரையை  சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
  • முட்டையும் அதிக புரோட்டீன் நிறைந்த உணவு.முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக  மாறும். இது, செரிமான பிரச்சனை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். 
  • பருப்பு மற்றும் தானியங்களை மீண்டும் மீண்டும் சூடாக்குவதால் அதில் உள்ள புரதச்சத்து அழிந்துவிடும்.
  • காளானில் இருக்கும் புரதச்சத்தை முழுமையாகப் பெற, உடனடியாக சமைத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.இதை, இரண்டாம் முறை  சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.
  • அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை திரும்ப சூடுபடுத்தினால் அதில் நச்சுத்தன்மை  அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும். 
  • உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது. சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; இதனால் வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.
  • ஒரு முறை உபயோகித்த சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.அவ்வாறு பயன்படுத்தினால் புற்றுநோய், இதய  நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.
  • பீட்ரூட்,கேரட் ஆகியவற்றையும் மீண்டும் சூடுசெய்து  பயன்படுத்தக் கூடாது.



Previous Post Next Post