-->

பன்னா மீன் பொரியல் செய்வது எப்படி


மீன் உணவு வகைகள்

மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலையும்,சக்தியையும்,நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது.குழந்தைகளுக்கு தேவையான புரத சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.பாலூட்டும் தாய்மார்களுக்கு மீன் ஒரு சிறந்த உணவாகும்.

தேவையான பொருட்கள்
  1. பன்னா மீன்  - ½ கிலோ 
  2. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  3. மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
  4. வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
  5. பச்சைமிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
  6. கடுகு – ½ ஸ்பூன்
  7. உப்பு - 1/2 ஸ்பூன் 
  8. ஜீரகத் தூள்  - 1/2 ஸ்பூன் 
  9. எண்ணெய் – தேவையான அளவு
  10. கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை
  1. முதலில் மீனை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் வைத்து சூடு செய்யவும்.
  3. தண்ணீர் மிதமான சூட்டில் இருக்கும்போது நறுக்கி வைத்துள்ள மீனை 2 நிமிடம் போட்டு கொதிக்க விடாமல் எடுத்து விடவும்.
  4. பின்னர் மீனை முள் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
  5. மீனை உதிர்த்துக் கொள்ளவும்.
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை,வெங்காயம் ,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  7. பின் சிறிதளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள், ஜீரக தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
  8. பின்னர் முள் நீக்கி எடுத்து வைத்துள்ள மீனை சேர்க்கவும்.
  9. மீன் சேர்த்ததும் நீண்ட நேரம் கிளறாமல் மசாலா மீனுடன் கலக்கும் வரை கிளறினால் போதும்.
  10. கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் ருசியான பன்னா மீன் பொரியல் ரெடி.

Previous Post Next Post