-->

மீன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா ?

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உணவாகும்.ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விடவும் மீன் வகைகளை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

மனிதனின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம்.
மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது.

உடல் எடையை குறைக்கும் மீன் உணவுகள்

ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக்கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

மீன்களின் மருத்துவப் பயன்கள்  
  1.  மீன் உணவு உடலுக்கு ஆரோக்கியம் தரும் மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது.
  2. மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.
  3.  மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.
  4. மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.
  5. மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.
  6. பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் சாப்பிடுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம்.
  7. தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க மீன் பயன்படுகிறது.
  8. பெண்கள் மீனை அதிக அளவில் சாப்பிடுவதால் எலும்புகள் பலமடைந்து பிரசவ நேரத்தில் வலியை தாங்கும் சக்தியை கொடுக்கிறது.
  9.  மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
  10. மீனை அதிகம் சாப்பிடுபவர்கள் மன அழுத்தம் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம்..
  11. தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.
  12. தூக்கம் வராமல் கஷ்டபடுவோர் உணவில் அதிக அளவு மீன் சேர்த்துக் கொண்டால் நல்லத் தூக்கம் வரும்.

மீன் எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று தெரியுமா?

மீன்களின் நிறம், மணம், கண், செவுள், பதம் ஆகியவற்றை சோதிப்பதன் மூலம் மீன்களின் தரத்தை கண்டறியலாம்

தரமான மீன்கள்

  1. மீன்களின் உடல் தோற்றம் கண்ணாடி போன்ற பளபளப்புடன் காணப்படும்.
  2.  தரமான மீன்களில் கடல் பாசி மணம் இருக்கும்.
  3.  கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும்.
  4. செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும்.
  5.  மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது.
  6. மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும்.
  7.  தசைப்பகுதி உறுதியாக இருக்கும்.

தரமற்ற மீன்கள் .

  1. மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும்.
  2. அழுகிய வாடை வீசும்.
  3. மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும்.
  4. செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  5. மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும்.
  6. மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும்.
  7. தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும்.
  8. கொழுப்பு நிறைந்த இறைச்சியை தவிர்த்து உடலுக்கு நன்மை சேர்க்கும் மீன் உணவுகளை உண்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்போம். 
Previous Post Next Post