நினைத்த காரியம் எளிதில் நிறைவேற எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று தெரியுமா?
தடைகள்
நீங்க - விநாயகரை வணங்க தடைகள் விலகி நன்மை நடக்கும்.
செல்வ
செழிப்பு அதிகரிக்க - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ லக்ஷ்மி
நாராயணரை வணங்க வேண்டும்.
நோய்
தீர்ந்து ஆரோக்கியம் பெற - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணாமூர்த்தியை
வணங்க வேண்டும்.
வீடு,நிலம்,சொத்து
சேர - செவ்வாய் பகவான், ஸ்ரீ சுப்பிரமணியரை வணங்க வேண்டும்.
நீண்ட
ஆயுளை பெற - ருத்திரனை வணங்க வேண்டும்.
மனவலிமை,உடல்
வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சனேயரையும் வணங்க வேண்டும்.
கல்வி,கலைத்துறையில்
சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.
திருமணம்
தடையின்றி நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன் மற்றும் துர்க்கை அம்மனை வணங்க வேண்டும்.
மாங்கல்ய
தோஷம் நீங்க - மங்கள கௌரியை வணங்கவேண்டும்.
குழந்தை
செல்வம் பெற - சந்தான லெட்சுமியும், சந்தான கிருஷ்ணனையும் வணங்க வேண்டும்.சஷ்டி
விரதம் இருந்து முருகனை வழிபட வேண்டும்.
தொழில்
முன்னேற்றம் மற்றும் லாபம் பெற -
திருப்பதி வெங்கடாசலபதியை வணங்க வேண்டும்.
புதிய
தொழில் துவங்க - ஸ்ரீ கஜலட்சுமியை வணங்க வேண்டும்.
விவசாயம்
தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி வணங்கவேண்டும்.
உணவு
கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணியை வணங்க வேண்டும்
வழக்குகளில்
வெற்றி பெற - விநாயகரை வணங்க வேண்டும்
சனி
தோஷம் நீங்க - ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர் வணங்க வேண்டும்.
பகைவர்
தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகனுக்கு சஷ்டி விரதம்
இருக்க வேண்டும்.
பில்லி,சூனியம்,செய்வினை
நீங்க - ஸ்ரீ வீரமாகாளி, சக்கரத்தாழ்வார் ,ஸ்ரீ நரசிம்மரை வணங்க வேண்டும்.
திருஷ்டி
விலக - முத்துமாரி அம்மனை வணங்க வேண்டும்.
பாவம்
நீங்கி மோட்சம் பெற – பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட வேண்டும்.
இவை
அனைத்தையும் பின்பற்றி வந்தால் நம் வாழ்க்கையில் பாவம் நீங்கி சகல செல்வங்களும்
என்றென்றும் நிலைத்திருக்கும்.