-->

கர்ப்ப காலத்தின் இரண்டாவது மூன்று மாதங்கள் ஒரு பார்வை

இரண்டாவது மூன்று மாதங்கள் (4-6)

முதல் மூன்று மாதங்களை வெற்றிகரமாக தாண்டிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டு கொள்ளுங்கள். ஏனெனில் இனி உங்கள் வயிற்றில் வளரும் கருவின் ஆயுட்காலம் கெட்டி. அதாவது இதற்க்கு மேல் கரு கலைவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

இரண்டாவது ட்ரைமெஸ்டர் நாட்களான நான்காவது மாதத்தில் உங்களின் அடிவயிறு சற்று மேடாக தொடங்கும். வயிற்றில் உள்ள தசைகளும், தோலும், வயிற்றில் வளரும் கருவின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடையும்.

இரண்டாவது ட்ரைமாஸ்டரை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்


முதல் மூன்று மாதங்களில் அனுபவித்த குமட்டல், வாந்தி, சோர்வு நீங்கி சந்தோஷமாக இருக்கும் கர்ப்ப காலம் என்றால் அது இரண்டாவது மூன்று மாதங்கள் தான். இந்த இரண்டவாது மூன்று மாதத்தில் பெண்களின் முகம் பழைய பொலிவை திரும்ப பெரும். தாய்மை பேற்றை அனுபவிக்க இந்த காலம் தான் சிறந்ததாகும்.

இரண்டாவது மூன்று மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி

குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தீர்மானிக்கும் பாலுறுப்புகள் வளரும் காலகட்டம் இந்த நான்காம் மாதம். இந்த மாதத்தில் குழந்தையின் இதயம் நன்றாக துடிக்க துவங்கும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும். கை, கால்கள் நன்றாக உருவாகி இருக்கும்.

5வது மாதத்தில், கருவானது தன்னைச் சுற்றியுள்ள பனிக்குட நீரில் நீச்சலடிக்க ஆரம்பிக்கும். ஐந்தாவது மாதத்திற்கு மேல் குழந்தையின் உருவம் மற்றும் உள் உறுப்புகள் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். முகத்தில் உள்ள பாகங்கள் முழுமையாக வளர்ச்சி பெரும். குழந்தைக்கு வெளியில் உள்ள சத்தங்கள் கேட்க தொடங்கும்.



ஆறாவது மாதத்தில்  குழந்தைக்கு விரல்களில் ரேகைகள் உருவாகும். குழந்தை வயிற்றை தொட்டு பார்க்க ஆரம்பிக்கும். குழந்தையின் முதுகு தண்டு முழுவதுமாக வளர்ந்திருக்கும். மூன்றாவது மாதத்தில் குழந்தை இருந்த அளவை விட தற்போது 3 மடங்கு அதிகம் வளர்ந்திருக்கும்.

இரண்டாவது மூன்று மாதத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்
இரண்டாவது மூன்று மாதத்தில் வயிற்றில் வளரும் கருவின் வளர்ச்சியினால் முதுகு பகுதி வளையும். இதனால் முதுகுவலி அதிகமாகும். முதுகு வலியை குறைக்க எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். மேலும் இந்த இரண்டாவது ட்ரைமெஸ்டரில் பெண்களின் தோல் கருப்பாக ஆரம்பிக்கும். இதற்க்கு உடலில் அதிகம் சுரக்கும் ‘மெலனினே’ காரணமாகும். 90% சதவிகித பெண்களுக்கு இவ்வாறு ஏற்படும்.

இரண்டாவது மூன்று மாதத்தில் உடலுறவு கொள்ளலாமா?


இந்த இரண்டாவது மூன்று மாதத்தில் தான் முதல் மூன்று மாதங்களில் அனுபவித்த சோர்வு, மயக்கம், வாந்தி போன்றவை நீங்கி பழையபடி உற்சாகமாக இருக்க முடியும். சொல்ல போனால் இந்த இரண்டாவது மூன்று மாதத்தில் தான் உடலுறவு கொள்ளவே பெண்கள் விரும்புவார்கள். இந்த நேரத்தில் உடலுறவு கொள்வதுதான் பாதுகாப்பானதும் கூட. உடலுறவு கொள்ளும் விஷயத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று பெண்ணின் சௌகாரியம் ஒன்றே.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.




அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும். 

Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும். 


Previous Post Next Post