-->

பிரசவத்திற்கு பின் உடல்நிலை மற்றும் உடற்பயிற்சி முறைகள்

பிரசவத்திற்கு பின் உடல்நிலை

பத்து மாதம் வயிற்றில் நீங்கள் சுமந்த குலக்கொடி தற்போது பிறந்துவிட்டது. நீங்கள் பட்ட கஷ்டம் ஓரளவிற்கு விலகி விட்டது. நீங்கள் பிரசவித்த அந்த பிஞ்சு குழந்தையின் அழுகை, சிரிப்பு போன்றவற்றை ரசிக்கும் காலம் இது.
பிரசவத்திற்குப் பின் வரும் 2 வார காலம் மிகவும் முக்கியமானது.

பிரசவத்திற்கு பின் உடல்நிலை

உங்கள் உடலை தொற்று நோய் ஏற்படாமல் காத்து கொள்ள வேண்டும். ஒரு வேளை எதாவது தோற்று நோயோ அல்லது இயல்புக்கு மாறான வலியோ ஏற்படும் போது உடனடியாக மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனையுடன் உரிய சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.

பிரசவத்திற்கு பின் ஏற்படும் சில ஆபத்துக்கள்

1. வலிப்பு
2. அதிகமான ரத்தப்போக்கு
3. காய்ச்சல்
4. அடிவயிற்றில் கடுமையான வலி
5. வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு
6. மலம் கழிப்பதில் பிரச்சனைகள்
7. வலி வீக்கம்

இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கட்டாயம் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பிரசவத்திற்கு பின் மருத்துவமனை

பிரசவத்திற்கு பிறகு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட இடைவெளிகளில் மருத்துவமனைக்கு செல்வது அவசியம். உங்களையும் குழந்தையையும் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ளுவது அவசியம்.
பிரசவத்தின் போது இருந்த குழந்தையின் எடை அடுத்த சில வாரங்களில் குறைய ஆரம்பிக்கும். இது இயல்பானதுதான். இதற்காக கவலைப்பட தேவையில்லை. குழந்தையின் எடை ஒரு சில வாரங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கும்.

பிரசவத்திற்கு பின் உணவு மற்றும் ஓய்வு

பிரசவ காலத்திற்கு பின் பெண்கள் நல்ல சத்தான உணவுகளை சாப்பிட்டு தேவையான ஓய்வு எடுத்துக் கொண்டால் மீண்டும் இழந்த உடல் நலத்தை பெறமுடியும். பிரசவ சமயத்தில் ஏற்பட்ட ரத்த இழப்பை சரிகட்டுவதற்கும் தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் நல்ல சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும். தானியங்கள், பால், கீரைவகைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும்.

சுத்தம், சுகாதாரம்

தினமும் இருமுறை குளிக்க வேண்டும். இயற்கை உபாதைக்கு பின் கைகால்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். குழந்தையை தூக்கும் போதோ பால் கொடுக்கும் போதோ நன்கு கைகளை கழுவ வேண்டும். ஏனெனில் புதிதாக பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். சுகாதார முறைகளை சரியாக பின்பற்றினால் உங்களையும், குழந்தைகளையும் நோய் தொற்றுகள் ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும்.

பிரசவத்திற்கு பின் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்?

பிரசவத்திற்கு பின் வயிறு குறைய உடற்பயிற்சி


கர்ப்ப காலத்தில் நீங்கள் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்தீர்களோ அதே உடற்பயிற்சிகளை தற்போது தொடரலாம். உங்களுக்கு இயற்கையான முறையில் சுகபிரசவம் நிகழ்ந்திருந்தால் 1 மாதத்துக்கு பிறகு உடற்பயிற்சிகளை செய்ய தொடங்கலாம்.

அறுவை சிகிச்சை முறையிலான பிரசவம் என்றால் 1.5 மாதத்துக்கு பின் பயிற்சி செய்யலாம். அதிலும் முதலில் நடை பயிற்சி செய்வதே நல்லது. பின்பு மெல்ல மற்ற பயிற்சிகளை தொடங்கலாம்.


பிரசவத்திற்கு பின் ஏன் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்?

1. தளர்ந்து போன உடல் உறுப்புகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.
2. உங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்.
3. கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட முதுகு வலியை குறைக்கும்.
4.  இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற முடியும்.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.




அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.  


Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.

Previous Post Next Post