கருத்தரிப்பதற்க்கு முன்பு நினைவில் கொள்ள வேண்டிய ஆலோசனைகள்
நீங்கள் கருத்தரிக்க வேண்டும் என நினைக்கும் பெண்ணா, அப்படியானால்
உங்களுக்கான பதிவு தான் இது. குழந்தை பெற்று கொள்ளலாம் என கணவன் மனைவி இருவரும் முடிவு
செய்யும் போதே, அது தொடர்பான பல்வேறு பயங்கள், சந்தேகங்கள், தயக்கங்கள் போன்றவை
இயற்கையாகவே வந்து விடுகின்றன. உங்கள் கர்ப்பத்தை நீங்கள் சரியாக திட்டமிடுவதன்
மூலம் பின்னாளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம்.
கருத்தரிப்பதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய உடல்நிலை
கருத்தரிக்க
நினைக்கும் பெண்ணின் உடல் நிலை எந்த பிரச்சனையும் இல்லாமல் சாதாரணமாக இருந்தால், கருவுற்ற பின் விசேஷ பராமரிப்பு எதுவும்
தேவையில்லை. ஆனால்,
சர்க்கரை நோய், வலிப்பு நோய், இதயநோய், ஆஸ்துமா, உயர் ரத்த
அழுத்தம், ரத்த சோகை, தங்கள் குடும்பத்தின் மருத்துவ பின்னணி, போன்ற பிரச்சனைகள் உள்ள பெண்கள், குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் முன், முழு உடல் பரிசோதனை செய்து, அதற்குண்டான மருந்துகள், மருத்துவ ஆலோசானைகள் போன்றவற்றை சரியாக எடுத்துக்
கொண்டு, உடலை கருத்தரிக்க ஏற்ற நிலையில்
வைத்துக்கொண்ட பிறகே கருவுற நினைப்பது நல்லது. கர்ப்பமாக நினைக்கும் பெண்கள்
என்னென்ன நினைவில் கொள்ள வேண்டும் என பின்வரும் பதிவுகளில் காண்போம்.
எடை அதிகமாக அல்லது குறைவாக உள்ள பெண்கள்
கருத்தரிப்பதற்கு
முன் உடல் எடை மிகவும் குறைவாகவோ, அல்லது மிகவும் அதிகமாகவோ இருந்தால் கர்ப்ப
காலத்தில் சில பிரச்சனைகள் தலைதூக்கலாம். இதனால் சரியான உணவு முறையும், உடல்
எடையையும் சரியாக பராமரித்தால் கர்ப்பக் கால பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
பெண்களின் உடல் எடை
அதிகமாக இருந்தால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) போன்றவை
ஏற்படக்கூடும். உடல் பருமன் அதிகம் உள்ள பெண்களுக்கு உண்டாகும் குழந்தைகளும் பெரிய
குழந்தைகளாகவே பிறக்கும். குழந்தை பெரிய உருவம் கொண்டிருந்தால் பிறப்புறுப்பின்
மூலம் வெளியே வருவது சிக்கலாகி சிசேரியன் செய்தால் தான் குழந்தையை வெளியே எடுக்க
முடியும் என்ற நிலை ஏற்படும்.
உடல் எடை குறைவாக
இருக்கும் பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். இவர்களுக்கு
பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் எடை குறைவாகவே பிறக்கின்றன. இதனால் பிரசவ
நேரத்திலும், பிரசவத்திற்கு பின்னும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
உணவு முறை மற்றும் உடற்பயிற்சி
இவற்றை தவிர்க்க
கருத்தரிக்கும் காலத்தில் சரியான உணவு முறையை திட்டமிடுதல் அவசியம். கர்ப்பமான
பெண்களுக்கு தோரயமாக ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் கொண்ட உணவுகள் தேவைப்படுகின்றன.
இதற்கு நிறைய பழங்களையும், காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைந்த கொழுப்புடைய பால், தயிர் போன்றவற்றை எடுத்து
கொள்ளலாம்.
மேலும் ஒரு நாளைக்கு
குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி அவசியம் செய்ய
வேண்டும். தினமும் முடியவில்லை என்றாலும் வாரத்திற்கு 5 நாட்களாவது செய்ய
வேண்டும். அப்போது தான் பிரசவம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டியவை
1. கல்சியம்,
வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்து உணவுகள் மற்றும் மாத்திரைகள் கட்டாயம்
தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. போலிக் ஆசிட் மாத்திரைகள்
கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும். போலிக் ஆசிட்
பச்சை காய்கறிகள், கீரைகள், சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றிலும்,
கல்லீரல், காராமணி போன்றவற்றிலும் மிகுதியாக காணப்படுகின்றன.
3. சரியான எடையுடன்
உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்.
4. நோய் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் பார்த்து
கொள்ள வேண்டும்.
5. இவற்றை விட
முக்கியம், கருத்தரிப்பதற்கு முன் மகப்பேறு மருத்துவரை ஒருமுறை சந்தித்து அவரின்
ஆலோசனை பெற வேண்டும்.
கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை
1. ரசாயன வகை உணவுகளை
தவிர்க்க வேண்டும்.
2. மன அழுத்தம்
ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
3. புகை பிடிக்கும்
பழக்கம் இருந்தால் அதை நிறுத்த வேண்டும். புகை பிடிப்பவர் அருகே இருப்பதையும்
கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
4. மது அருந்தும் பழக்கம் அறவே கூடாது.
ஒருவேளை மது அருந்துபவராக இருந்தால் கர்ப்ப காலத்தில் அவற்றை தவிர்க்க வேண்டும்.
இந்த பதிப்பானது மேலும் பல
விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும்அமேசான் தளத்தில்
விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள்,
கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்பமானவர்கள்
போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.