RH டைப் என்றால் என்ன?
பொதுவாக மனிதனின் ரத்த வகைகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை A, B, O, AB என நான்கு முக்கியமான வகைகள் உண்டு. இவையெல்லாம் நாம் பொதுவாக அறிந்த ரத்த வகைகள். இவை தவிர ரத்தத்தில் Rh பாசிட்டிவ், Rh நெகட்டிவ் என்ற இருபிரிவுகளும் உண்டு. இதை எவ்வாறு பிரித்திருக்கிறார்கள் என்றால் ரத்த சிவப்பனுக்களில் உள்ள ஆண்டிஜெனை வைத்துதான். ரத்தத்தில் இந்த ஆண்டிஜென் இருந்தால் Rh பாசிடிவ் என்றும், ஆண்டிஜென் இல்லையென்றால் Rh நெகடிவ் என்றும் கூறுகிறார்கள். இதில் Rh நெகட்டிவ் உள்ள தாய் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டியவராவார்.RH டைப் மாறி இருந்தால் என்னவாகும்?
குழந்தையினுடைய அம்மாவின் ரத்த வகை Rh நெகட்டிவ்வாக இருந்து, அப்பாவின் ரத்தம் Rh பாசிட்டிவ்வாக இருந்தால் பிறக்க போகும் குழந்தையின் ரத்தம் Rh பாசிட்டிவ்வாக இருக்க 50% வாய்ப்பு உள்ளது. பிரசவ நேரத்தில் அம்மாவின் Rh நெகட்டிவ் ரத்தத்துடன் குழந்தையின் Rh பாசிட்டிவ் ரத்தம் இணைந்தால், தாயின் RH நெகடிவ் ரத்தம் குழந்தையின் Rh பாசிட்டிவ் ரத்தத்தை ஒரு ஆபத்தான பொருளாக எண்ணி தாயின் ரத்தத்துடன் தொடர்பில்லாத ‘ஆன்டிபாடி’ ஒன்றை உருவாக்குகிறது. அதாவது குழந்தை பிரசவ சமயத்தில் கருப்பையில் விட்டுச் செல்கிற பாசிட்டிவ் ரத்தத்தால் இது உருவாகிறது.பிரசவத்தின் போது குழந்தையானது இப்படி ஒரு ‘ஆன்டிபாடி’ தாயிடம் விட்டுச் செல்வதால் அப்போது அந்த குழந்தைக்கோ தாய்க்கோ எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் அந்த தாயானவள் மீண்டும் கார்ப்பமாகும்போது அவரின் இரண்டாவது குழந்தைக்குத் தான் பாதிப்புகளை அந்த ‘ஆன்டிபாடி’ உண்டாக்குகிறது. இந்த ஆண்டிபாடியானது இரண்டாவது குழந்தைக்கும், தாய்க்கும் மிகுந்த ஆபத்தை உண்டாக்கும். இந்த அன்டிபாடியினால் இரண்டாவது குழந்தைக்கு மஞ்சள் காமாலை, இதய பாதிப்பு, ரத்த சோகை, மூளை பாதிப்பு போன்றவை ஏற்படும். சில சமயங்களில் இரண்டாவது குழந்தையானது இறந்து போவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
RH காரணியினால் உண்டாகும் பாதிப்புகளை எவ்வாறு தடுப்பது?
RH பாதிப்பு யாரையெல்லாம் தாக்காது?
1. தாயின் ரத்தம் Rh பாசிட்டிவாக இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை.2. தாய் Rh நெகட்டிவ் ரத்த வகையாக இருந்து பிறந்த குழந்தையின் ரத்தமும் Rh நெகட்டிவ்வாக இருந்துவிட்டால் எந்த பிரச்னையும் இல்லை.
3. தாய், தந்தை இருவரின் ரத்தமும் Rh நெகடிவ்வாக இருந்து விட்டால் பிறக்கும் குழந்தையின் Rh ரத்தமும் நெகடிவ்வாகவே இருக்கும். இவ்வாறு இருந்தாலும் எந்த பாதிப்பும் இல்லை.
4. தாயின் ரத்தம் Rh பாசிட்டிவாக இருந்து, தந்தையின் ரத்தம் Rh நெகடிவ்வாக இருந்தாலும் எந்த பிரச்னையும் இல்லை.
இந்த பதிப்பானது மேலும் பல
விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில்
விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள்,
கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள்
போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.
அமேசான் தளத்தில் இந்த
புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.
Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.
Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.