பிரசவத்திற்கு எவ்வாறு தயார் செய்வது?
கர்ப்ப காலத்தின் கடைசி கட்டம் பிரசவம். பிரசவத்திற்கு உங்களை நீங்களே தயார் செய்து கொள்ள வேண்டும். பிரசவ காலத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். உங்களுக்கும், பிறக்க உள்ள குழந்தைக்கும் தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் பிரசவம் தொடங்கிவிட்டால் எவற்றை எடுத்து வைப்பது என்ற எண்ணம் மனதில் ஓடாது. அதனால் தான் முன்பே திட்டமிட வேண்டும்.சரி என்னென்ன பொருட்கள் பிரசவ காலத்திற்கு தேவைப்படும்?
பிரசவ நேரத்தில் பெண்களுக்கு தேவையானவை1. நைட் டிரெஸ்சஸ்
2. தாய்பால் கொடுக்க வசதியான உள்ளாடைகள்
3. பேண்டீஸ்கள்
4. நாப்கின்கள்
5. பிரஷ், பேஸ்ட், சோப்பு, ஷாம்பூ
6. பேப்பர் மற்றும் பேனா ( உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுதி வைத்து மருத்துவரிடம் கேட்பதற்கு)
7. கார்ப்ப கால அறிக்கைகள்
பொதுவாக நார்மலான பிரசவமாக இருந்தால் 3 நாட்களும், அதுவே சிசேரியனாக இருந்தால் 5 நாட்களும் மருத்துவமனையில் தங்க வேண்டியது இருக்கும். அதற்க்கு ஏற்ப பொருட்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
பிறக்க போகும் குழந்தைக்கு தேவையானவை
1. எளிய பருத்தி ஆடைகள்
2. கம்பளி, ஸ்வெட்டர்
3. வைப்ஸ்
4. டையப்பர்கள்
5. டவல்கள்
6. ரப்பர் ஷீட்கள்
7. பேபி சோப்பு, ஷாம்பூ, லோஷன்
பிரசவத்திற்கு எப்படி திட்டமிடுவது?
பிரசவ காலம் தொடங்கியதும் மேற்சொன்ன அனைத்தையும் எடுத்து வைப்பதும், திட்டமிடுவதும் பற்றியதெல்லாம் சிந்தித்து கொண்டு இருக்க முடியாது. எனவே இவற்றை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.உங்களுக்கு குழந்தை பிறந்ததும் குழந்தையையும் உங்களையும் கவனித்து கொள்ள ஆரம்பகாலத்தில் ஒருவரின் உதவி தேவைப்படும். பொதுவாக குடும்பங்களில் பெண்ணின் அம்மாவோ, மாமியாரோ, கணவரோ உடன் இருந்து உதவும் வகையில் பார்த்து கொள்ள வேண்டும்.
மேலும் குழந்தை பிறந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தை தூங்குவதற்கு தேவையான இடம், தொட்டில், பொருட்களை வைக்க இடம், வீட்டை சுத்தம் செய்வது போன்றவை நீங்கள் முன்கூட்டியே செய்ய வேண்டும்.
பிரசவம்
பிரசவம் தொடங்கிவிட்டால் பிரசவ வலி எவ்வளவு நேரம் இருக்கும், பிரசவம் எப்போது ஆகும் என்பது போன்ற பல சந்தேகங்கள் இருக்கலாம். சாதாரணமாக கர்ப்பமானது 40 வாரங்கள் என வரையறுக்கபட்டுள்ளது. ஆனால் 37 வாரங்களை கடந்து விட்டாலே பிரசவத்திற்கு நீங்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். உங்களுக்கு அறிக்கைகளில் குறித்து கொடுக்கபட்டிருக்கும் பிரசவ தேதிக்கு ஒரு வாரம் முன்போ அல்லது ஒரு வாரம் பின்பே பிரசம் நிகழும். குறிப்பிட்ட தேதியில் பிரசவம் நிகழ்வது ஒரு சிலருக்கு மட்டுமே.குறிப்பிட்ட தேதிக்கு ஒரு வாரம் பின்பு பிரசவம் நிகழ்ந்தால் அதை அதிமுதிர்ந்த கார்ப்பம் என கூறுவார்கள். குழந்தை இருக்கும் நிலையை பொருத்து மருத்துவர் குறிப்பிட்ட தேதியை விட அதிகபட்சம் 10 நாட்கள் வரை காத்திருப்பார். அப்படியும் பிரசவம் ஆகவில்லையென்றால் மருத்துவர் அறுவைசிகிச்சை, வேக்கம், போர்செப்ஸ் போன்றவற்றின் மூலம் குழந்தை பிறக்க உதவி செய்வார்.
இந்த பதிப்பானது மேலும் பல
விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில்
விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள்,
கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள்
போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.
அமேசான் தளத்தில் இந்த
புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.
Google
Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.