கர்ப்ப கால பரிசோதனைகள்
வயிற்றில் கரு உருவானதில் இருந்து பிரசவம் முடியும் வரை அனைத்து கர்ப்பிணிகளும் செய்ய வேண்டிய சில முக்கியமான பரிசோதனைகள் குறித்து சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்.
கர்ப்ப கால பரிசோதனைகள் ஏன் அவசியம்?
கருவை சுமக்கும் தாயும், வயிற்றில் வளரும் குழந்தையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை அறிய கர்ப்ப கால பரிசோதனைகள் மிகவும் முக்கியம். ஏனெனில் பரிசோதனைகள் செய்தால்தான் எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஆரம்பத்திலயே சரி செய்து பிரசவ காலத்தை சிரமமில்லாமல் கடக்க முடியும். சரி என்னென்ன பரிசோதனைகள் என்பதை விரிவாக காண்போம்.
1. சிறுநீர் பரிசோதனை
கர்ப்ப கால ஆரம்பத்தில் சிறுநீர் பரிசோதனை அவசியம். ஏனெனில் வயிற்றில் கரு உருவாகிவிட்டது என்பதை அறிய சிறுநீர் பரிசோதனை மிக அவசியமாகும். இதற்க்கு அதிகாலை நேர சிறுநீரைப் பரிசோதனை செய்ய வேண்டும். இப்பரிசோதனையில் ஹியூமன் கோரியானிக் கொனடோட்டிராபிக் ஹார்மோன் (Human Chorionic Gonadotrophic Hormone - HCG) சிறுநீரில் இருக்கிறதா? என்பது சோதிக்கப்படும். இதை நாம் வீட்டில் கூட செய்யலாம். மருந்து கடைகளில் விற்கும் pregnant kitல் இந்த எளிய பரிசோதனையை நாம் செய்யலாம்.
2. கர்ப்பம் கால இரத்தப்பரிசோதனை
சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் அடைந்துவிட்டோமா என்பதில் சந்தேகம் வந்தால் இரத்தத்தில் உள்ள HCG ஹார்மோன் அளவினைப் பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும். HCG அளவானது கர்ப்பம் அடைவதற்கு முன்னால் இருந்து ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டே செல்லும். இவ்வாறு அதிகரித்த HCG அளவானது பிரசவம் முடிந்த 5வது வாரத்திற்கு பிறகு மீண்டும் பழைய அளவை எட்டும். அதை பின்வரும் அட்டவணையில் காணலாம்.
ரத்தத்தில் HCG யின் அளவு
Sl.no கருத்தரித்த நாட்கள் (mIU/ml
1 7 Days 0-5
2 14 Days 3 - 246
3 21 Days 18-7340
4 28 Days 1080-56500
5 35-42 Days 7650-229000
6 43-64 Days 25700-288000
7 57-78 Days 13300-253000
8 17-24 Days 4060-65400
9 25 Days to still delivery 3640-117000
10 After delivery to 4-6 weeks Before Pregnant Level <5
கர்ப்பத்தினை உறுதி செய்தவுடன் மகப்பேறு மருத்துவரை அணுகுதல் அவசியம்.
3. இரத்த அழுத்தம்
கர்ப்ப கால இரத்த அழுத்தமானது 120/80 கீழ் இருந்தல் வேண்டும். ஒருவேளை 140/90 மேல் இருந்தால் மிகவும் கவனம் தேவை. மகப்பேறு மருத்துவரை அணுகி அடிப்படை இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
4. இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை
கர்ப்பிணிகள் தங்களது 4வது மற்றும் 7வது மாதங்களில் சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடதலாகவோ, அல்லது குறைவாகவே இருந்தால் மருத்துவரின் ஆலோசனை படி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
5. ஹீமோகுளோபின் பரிசோதனை
இது கர்ப்பிணியின் உடலில் தேவையான அளவு இரத்தம் உள்ளதா? என்பதைக் தெரிந்து கொள்ள உதவும். தேவை ஏற்படின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க அதற்குரிய மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.
6. இரத்த வகை மற்றும் ஆர் ஹெச் (RH) பரிசோதனை
தாயின் இரத்த பிரிவு பாசிட்டிவாக இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. நெகட்டிவாக இருந்தால் இரண்டாவது குழந்தைக்கு பிரச்சனை (RH incompatiblity) ஏற்படலாம். ஆகவே ஆர்எச் நெகட்டிவ் குருப் கர்ப்பிணிகள் முதல் கர்ப்பத்தின் போது பிரசவம் முடிந்த மூன்று நாட்களுக்குள் தாய்க்கு (Anti-D) என்னும் ஊசியை போட வேண்டும்.
7. தைராய்டு பரிசோதனை
கருவுற்ற 2வது மாதம் இந்த பரிசோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டும். ஹெச்ஐவி (HIV) பரிசோதனை, விடிஆர்எல் பரிசோதனை (VDRL), ஹெப்படைட்டிஸ் B பரிசோதனை போன்றவற்றையும் செய்து கொள்ள வேண்டும்.
8. சிறுநீரில் புரதம் சர்க்கரை பரிசோதனை
சிறுநீர் பரிசோதனையில் புரதம் மற்றும் சர்க்கரையின் அளவானது சரியான அளவில் உள்ளதா என்று தெரிந்து கொள்வது அவசியம். இல்லையெனில் அவற்றை கட்டுபடுத்தகூடிய மருத்துவரின் பரிந்துரையோடு எடுத்து கொள்ளலாம்.
9. அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை (Ultra Sound Scan)
கர்ப்பமான 8 முதல் 13 வாரத்துக்குள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். இதில் கருவில் வளர்வது ஒரு குழந்தையா? அல்லது இரண்டா? பொய்க் கர்ப்பமா? fallopian tubes எனப்படும் கருக்குழாயில் வளர்கிறதா என்பது போன்ற பல விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
கருத்தரித்து 20 முதல் 22 வாரங்களில் குறைபாடுகள் கண்டறியும் இரண்டாவது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்ய வேண்டும். இதில் வயிற்றில் வளரும் குழந்தையின் தலை முதல் பாதம் வரை உள்ள அனைத்து உறுப்புகளும் பரிசோதிக்கப்பட்டு சரியான வளர்ச்சியை அடைந்திருக்கிறதா அல்லது ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்று அறியலாம். அப்படி இருந்தால் ஆரம்பத்திலயே அதை சரி செய்து விட முடியும்.
கருத்தரித்து 32 வாரங்கள் கழித்து செய்வது மூன்றாவது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகும். இந்த சோதனையை செய்தவன் மூலம் கருவின் குழந்தையின் வளர்ச்சியையும், பிரசவத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
10. சிறப்புப் பரிசோதனைகள்
கர்ப்பமான 11 முதல் 14 வாரங்களில் எடுக்கப்படும் நியுக்கல் ஸ்கேன் சோதனையில் கருவில் உள்ள குழந்தைக்கு டவுன் கினட்ரோம், டிரைசோமி போன்ற பிறவிக் கோளாறுகள் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
யாருக்கெல்லாம் பிறவி கோளாறுடன் கூடிய குழந்தைகள் பிறக்கும்?
1. ஆண் பெண் இருவரின் குடும்பத்திலோ அல்லது பெற்றோருக்கே பிறவி குறைபாடுகள் இருந்தால்
2. இதற்க்கு முன் உள்ள குழந்தைக்கு பிறவி குறைபாடு இருந்தால்
3. கர்ப்பமாவதர்க்கு முன் நீரிழிவு நோய் இருந்தால்
4. தாயின் வயது 35 அல்லது அதற்க்கு மேல் இருந்தால்
5. கர்ப்பமான சமயத்தில் உபயோகபடுத்தும் சில மருந்துகளால்
இவற்றை கண்டறிய இந்த சிறப்பு பரிசோதனைகள் அவசியம்.

இந்த பதிப்பானது மேலும் பல
விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில்
விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள்,
கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள்
போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.
அமேசான் தளத்தில் இந்த
புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.
Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.