கர்ப்பகால உடற்பயிற்சிகள் ஏன் செய்ய வேண்டும்?
கர்ப்ப காலம் முழுவதுமே சோர்வாக இருக்கும் என்னால் எப்படி உடற்பயிற்சி செய்ய முடியும் என்பது கர்ப்பம் தரித்த பெண்கள் பலரின் கேள்வியாகும். ஆனால் கர்ப்ப காலத்தில் என்ன வகையான உடற்பயிற்சிகளை செய்கிறீர்கள் என்பது முக்கியம். கர்ப்பகாலம் முழுவதும் உடற்பயிற்சி செய்வதால் நீங்கள் கர்ப்ப காலத்தில் நல்ல பலன்களை பெறுவீர்கள். இதற்க்கு முன் உடற்பயிற்சி பழக்கம் இல்லையென்றாலும் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகள் செய்வது உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்து கொள்ள உதவும்.
உடற்பயிற்சிகளில் முக்கியமானது நடைபயிற்சி (Walking) ஆகும். உங்கள் உடற்பயிற்சி அட்டவணையில் கட்டாயம் நடைபயிற்சி இருக்க வேண்டும். இது ஒரு எளிய பயிற்சியாகும். இதை எல்லோராலும் நிச்சயம் செய்ய முடியும். வேறு எந்த உடற்பயிற்சியும் செய்யவில்லை என்றாலும் கட்டாயம் நடைபயிற்சி செய்ய வேண்டும். இது உங்கள் கர்ப்ப காலத்தை சிக்கல் இல்லாமல் எதிர்கொள்ள உதவும்.
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா?
1. சுறுசுறுப்பாக இருக்க வைக்கும்உங்கள் குழந்தை வளரும் காலம் முழுவதும் உங்கள் உடல் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ளும். நிற்பதில் தொடங்கி உட்காருவது வரையில் பலவகையான சிரமங்களை பெண்கள் சந்திப்பார்கள். உடற்பயிற்சி செய்வதால் உங்கள் உடல் நெகிழ்வு தன்மை பெரும். எனவே இவ்வாறான சிரமங்களை எளிதில் கையாள முடியும்.
2. முதுகு வலி மற்றும் கால் வலி குறையும்
கர்ப்ப காலம் முழுவதும் பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை என்னவென்றால் அது முதுகு வலியாகும். வயிற்றில் குழந்தை வளர வளர உடலின் சமநிலை மாறுவதால் முது வலியும் அதிகமாகும். உங்கள் உடலின் மொத்த எடையும் முன் பக்கமே இருப்பதால் முதுகு வலி வருவது இயற்கை. இதற்க்கு அடுத்தாற்போல் பெண்களை அதிகம் வதைப்பது கால்வலியாகும். இந்த வலிகளிலிருந்து நிவாரணம் பெற கட்டாயம் உடற்பயிற்சி அவசியம். தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதால் இந்த வகையான வலிகளில் இருந்து விடுதலை பெறலாம்.
3. நன்றாக தூங்க முடியும்
கர்ப்பிணி பெண்கள் பலர் தூக்கம் வராமல் தவிப்பார்கள். அப்படியே தூங்கினாலும் அது ஆழ்ந்த தூக்கமாக இருக்காது. ஆனால் உடற்பயிற்சி செய்தால் உடலில் உள்ள தசைகள் நன்றாக தளர்ந்து விடும். இதனால் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.
4. பிரசவத்திற்கு தயார் செய்யும் உடற்பயிற்சி
முந்தைய காலங்களில் கர்ப்பிணி பெண்களை குனிந்து நிமிர்ந்து கடினமான வேலைகளை செய்ய வேண்டும் என சொல்லுவார்கள். இதற்க்கு காரணம் பிரசவ காலத்தை வலிகள் இல்லாமல் உணர வேண்டும் என்பதற்காகவே. கடினமான வீட்டு வேலைகள் செய்தால் உடற்பயிற்சி என்பதே தேவையில்லை. ஆனால் தற்போதைய கால கட்டத்தில் உடலுழைப்பு என்பது அரிதாகிவிட்டது. எல்லா வேலைகளையும் செய்ய இயந்திரங்கள் வந்து விட்டது. அதனால் உடலுழைப்பு என்பது குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் உடற்பயிற்சிகள் செய்தால் உங்கள் உடல் வலுவடைந்து பிரசவத்திற்கு தன்னை தயார் செய்து கொள்ளும்.
5. பழைய உடலை பெற முடியும்
பிரசவம் முடிந்து சில காலம் கழித்து பெண்களை கவலைக்கு உள்ளாக்கும் ஒரு விஷயம் பழைய உடலமைப்பு தற்போது இல்லை என்பதே. பிரசவம் முடிந்த சில காலத்தில் உடல் பருத்துவிடும். உடல் அங்கங்கள் தளர்வாகிவிடும். ஆனால் கவலைப்பட்டு என்ன பயன். முறையான உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்கள் பிரசவத்திற்கு முன்பு இருந்த பழைய உடலமைப்பை திரும்ப பெற முடியும் என்பதே உண்மை.
எந்த வகையான உடற்பயிற்சிகளை செய்யலாம்?
1. நடைப்பயிற்சிகர்ப்ப கால உடற்பயிற்சிகளில் மிக முக்கியமானது நடைபயிற்சியாகும். ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும். இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒரு எளிய உடற்பயிற்சியாகும். பிரசவ காலம் நெருங்கும் சமயத்தில் நடைபயிற்சி செய்யும் போது மூச்சு வாங்கும். அதற்க்கு ஏற்றார் போல உங்கள் நடக்கும் வேகத்தை சிறிது குறைத்து கொள்ளலாம்.
2. யோகா பயிற்சி
கர்ப்ப காலத்தில் உங்கள் உடலை தளர்வுறச் செய்வது மிகவும் முக்கியம். உடலை தளர்வுறச் செய்ய யோகா பயிற்சிகள் கை கொடுக்கும். எளிய முறையில் நின்று மற்றும் உட்கார்ந்து செய்யும் பயிற்சிகளை செய்தால் போதுமானது.
3. மூச்சு பயிற்சி
பிரணயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி செய்தால் உடல் பாகங்கள் அனைத்திற்கும் அதிக ஆக்சிஜன் செல்லும். இது உங்களை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள உதவும். மேலும் பிரசவம் இயற்கை முறையில் நிகழும்போது மூச்சு பயிற்சி உங்களுக்கு நிறையவே கை கொடுக்கும்.
இந்த பதிப்பானது மேலும் பல
விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில்
விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள்,
கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள்
போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.
அமேசான் தளத்தில் இந்த
புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.
Google
Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.