-->

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவு வகைகள்

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

கர்ப்பிணிகள் மிகவும் கவனத்துடன் சாப்பாட்டு விஷயத்தில் இருக்க வேண்டும். ஏனெனில் உங்களுக்குகென சாப்பிட்டு வந்த நீங்கள் இனி உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவும்  சாப்பிட வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்தான உணவுகளை சாப்பிட்டால்தான் அந்த பெண், அவள் வயிற்றில் வளரும் குழந்தையை ஆரோக்கியத்துடன் பிரசவிக்க முடியும்.

கர்ப்ப காலத்தில் போலிக் அசிட், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை மிகமிக அவசியம். தினமும் உங்கள் உணவில் ஒரு வகை கீரை, பருப்பு, பால், தயிர் இவை தவறாமல் இடம் பெற்று இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் அளவுள்ள திரவ உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும். காரம் மற்றும் எண்ணெய் அதிகம் இல்லாத உணவு வகைகளை சாப்பிடலாம்.


கர்ப்ப காலத்தின் உணவுகள்

அதேபோல தினம் ஒரு ஆப்பிள், அல்லது  வாழைப்பழம் சாப்பிட வேண்டும். இதனால் பிரசவ கலத்தில் மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எனில் முட்டை, சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால்  இரவு நேரங்களில் இவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதே போல சாப்பிடும் உணவில் புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், மினரல்கள் இருப்பது முக்கியம்.

குடிநீரையும் நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். இல்லையெனில் அசுத்த நீரால் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகள் வரலாம். அதே போல சாப்பிட்டவுடன் படுக்க கூடாது. சிறிது நேரம் நடைபயிற்சி, புத்தகம் படிப்பது, இசை கேட்பது போன்றவற்றை செய்யலாம்.

கர்ப்ப காலத்தில் சராசரியாக 8 முதல் 10 கிலோ எடை கூடுவது இயல்பானது. ஒருவேளை நீங்கள் குண்டானவராக இருந்தால் கர்ப்பகாலத்தில் 6 முதல் 8 கிலோவிற்கு மேல் எடை ஏறாமல் பார்த்து கொள்ள வேண்டும். மெலிந்த தேகம் உடையவராக இருந்தால் 10 முதல் 12 கிலோ வரை எடை கூடலாம். இந்த உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணம் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பே ஆகும்.

இதற்க்கு மேல் உங்கள் எடை கூடாமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லையேல் பிரசவித்த பிறகு உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம். குழந்தை பிறப்பிற்கு பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் பல பெண்கள் அவதிப்படுவதை இன்றும் காணலாம்.

கர்ப்ப காலத்தில் எங்கெல்லாம் எடை கூடுகிறது?

வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் சராசரி எடை  2.8 முதல் 3.5 கிலோ வரையாகும். கர்ப்பப்பை, நச்சுக்கொடி, பனிக்குட நீர் என சேர்த்து 1.5 கிலோ, ரத்தம் மற்றும் தேங்கியிருக்கும் நீர் – 2.5 கிலோ, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு – 4 முதல்  4.5 கிலோவாகும். இவ்வாறு சராசரியாக கர்ப்ப காலத்தில் பெண்ணின் எடை 8 முதல் 10 கிலோ வரை கூடுகிறது. இது பெண்ணிற்கு பெண் மாறுபடும்.

அதிகமான எடையை எவ்வாறு குறைப்பது?

கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே பெண்களின் ரத்த அழுத்தம் அதிகமாகும். எடை அதிகரித்தால் ரத்த அழுத்தம் மேலும் அதிகரித்து பல்வேறு பிரச்னைகளைத் ஏற்படுத்தும். பிரசவத்திலும் சிக்கல்கள் வரலாம்.

ஒரு சில பெண்களுக்கு, எட்டு மற்றும் ஒன்பதாம் மாதங்களில் உடம்பில் நீர்கோத்து, கை, கால் போன்றவை வீக்கமாக காணப்படும். இவ்வாறு கை, கால் போன்றவற்றில் வீக்கமாக உள்ள பெண்கள் உண்ணும் உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளவேண்டும். பார்லி அரிசியை நிறைய தண்ணீர் சேர்த்து கஞ்சி போல காய்ச்சி குடித்தாலும் உடலில் உள்ள தேவையற்ற நீரானது சிறுநீர் மூலமாக வெளியேறி உடல் எடை வெகுவாக குறையும்.

எந்தெந்த சத்து குழந்தை பிறப்பிற்கு எவ்விதத்தில் உதவுகிறது?

1. இரும்புசத்தானது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆக்சிஜனை
வழங்கும் ரத்த சிவப்பு செல்களை உருவாக்குகிறது.
2. கால்சியம் சத்தானது குழந்தை வளர்வதற்க்கு தேவையான எலும்புகளையும், பற்களையும் உருவாக்க உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் என்ன மாதிரியான உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்

3. போலிக் ஆசிட்டானது முதுகுதண்டு குறைபாடுகள் வராமல் தடுக்கவும், ரத்த விருத்தியை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.
4. வைட்டமின் B12 ஆனது ரத்த சிவப்பனுக்களை உருவாக்கவும், நரம்பு மண்டலத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது.
5. வைட்டமின் A ஆனது குழந்தைக்கு ஆரோக்கியமான சருமத்தையும், நல்ல கண் பார்வை கிடைக்கவும் உதவுகிறது.
6. வைட்டமின் C ஆனது இரும்புச்சத்தை உடல் உறிஞ்சி கொள்ள உதவுகிறது. ஆரோக்கியமான ஈறுகளை உருவாக்கவும், ஜலதோஷம் உண்டாகாமலும் தடுக்கிறது.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.



அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.  


Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.


Previous Post Next Post