பெண் குழந்தை பிறக்க அறிவியல் வழிமுறைகள்
ஆண் குழந்தை தான் வேண்டும் என விரும்பும் அதே சமயத்தில் பெண் குழந்தை தான் வேண்டும் என விரும்புவர்கள் பலர். அவற்றிக்கு காரணம் தாயாக, சகோதரியாக, பெண்ணாக, மனைவியாக ஒரு பெண் துணை இல்லாமல் ஒரு ஆணால் வாழ முடியாது. அப்படிப்பட்ட பெண்ணை குழந்தையாக பெற்று கொள்ள பல்வேறு ஆண்கள் விரும்புகின்றனர். பொதுவாக ஆண் மற்றும் பெண் குழந்தைக்கென தனிதனி செல்கள் உள்ளன. சரி பெண் குழந்தை பிறக்க என்ன அறிவியல் வழி முறைகள் உள்ளது என்பதை பார்ப்போம்.டாக்டர். ஷட்டில்ஸ் வழிமுறைகள்
டாக்டர். லன்ரம். பி. ஷட்டில்ஸ் என்னும் அமெரிக்க அறிவியலாளர் குழந்தை பிறப்பது தொடர்பான கோட்பாடுகளை வகுத்துள்ளார். இவரின் கோட்பாடுகளை பின்பற்றியவர்கள் தங்களுக்கு 75% துல்லியமான முடிவுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆண் குழந்தை பிறக்க மற்றும் பெண் குழந்தை பிறக்க இவர் சில வழி முறைகளை வகுத்துள்ளார். சரி இவரின் வழிமுறைகள் என்ன என்பதை பின்வருமாறு காண்போம்பெண் குழந்தை பிறக்க டாக்டர். ஷட்டில்ஸ் வகுத்து கொடுத்த வழிமுறைகள்
பொதுவாக பெண்ணின் உடலில் இருந்து X (பெண்) வகை குரோமோசோம் மட்டுமே வெளிப்படும். ஆனால் ஆணின் உடலில் X மற்றும் Y(ஆண்) வகை குரோமோசோம் என இரண்டும் வெளிப்படும்.
உடலுறவின் போது பெண்ணின் X குரோமோசோமும், ஆணின் X குரோமோசோமும் இணைந்தால் பெண் குழந்தை பிறக்கும். அதே சமயம் பெண்ணின் X குரோமோசோமுடன் ஆணின் Y குரோமோசோம் இணைந்தால் ஆண் குழந்தை பிறக்கும்.
1. பிறப்புறுப்பின் PH சூழ்நிலை
பெண்ணின் பிறப்புறுப்பு பாதையானது அமிலத்தன்மை நிறைந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில் பெண் குழந்தை செல்லானது அமிலத்தன்மை உள்ள சூழ்நிலையில் மட்டுமே உயிர் வாழும். ஒரு வேளை பெண்ணின் பிறப்புறுப்பு பாதையானது காரத்தன்மை நிறைந்ததாக இருந்தால் பெண் குழந்தை செல்கள் அழிவதற்கு அதிகமான வாய்புகள் உள்ளன. காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை நிறைந்த உணவுகள் எவை என்பதை உணவுகள் பகுதியில் பார்க்கவும்.2. உடலுறவு
பெண் குழந்தை வேண்டும் என நினைப்பவர்கள் தொடர்ச்சியாக உடலுறவில் ஈடுபடலாம். தொடர்ச்சியாக உடலுறவில் ஈடுபடும்போது ஆண் குழந்தை செல்கள் அதிக அளவில் உருவாவது தவிர்க்கபடும். இதனால் பெண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உண்டாகும்.3. உடலுறவு நிலை
பெண் குழந்தை பிறக்க உடலுறவு நிலையும் மிக முக்கியமான ஒன்றாகும். பெண் குழந்தை வேண்டும் என நினைப்பவர்கள் மிஷினரி ஸ்டைல் (Missionary Style) என்னும் முறையில் உடலுறவு கொள்ள வேண்டும். இந்த முறையில் உடலுறவு கொண்டால் பெண் குழந்தை செல்கள் சினை முட்டையை அடையும் வாய்ப்பு அதிகமாகும். ஏனெனில் இந்த முறையில் ஆண் குழந்தை செல்கள் சினை முட்டையை அடைய நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். ஆனால் சினை முட்டையை அடைவதற்கு முன்பாகவே பல ஆண் குழந்தை செல்கள் அழிந்து விடும். ஏனெனில் ஆண் குழந்தை செல்களின் ஆயுட்காலம் மிக குறைவாகும். அதே சமயம் பெண் குழந்தை செல்கள் ஆயுட்காலம் அதிகமாகும்.4. உடலுறவில் உச்சகட்டம்
5. தட்பவெப்பம்
பெண் குழந்தை வேண்டும் என நினைக்கும் ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகள் அணிய வேண்டும். இறுக்கமான ஆடை அணிந்தால் உடலின் வெப்பநிலை வெளியேற வழியின்றி உடலிலேயே இருக்கும். அதிகமான வெப்பத்தில் ஆண் குழந்தைக்கான செல்கள் உருவாவது குறையும். மேலும் உடலுறவிற்கு சில மணி நேரத்திற்கு முன் வெந்நீரில் குளிக்கலாம். உடலின் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்க கூடாது.மேற்கண்ட் வழிமுறைகளை பின்பற்றினால் நீங்கள் விரும்பும் குழந்தை பெற்று கொள்ள அதிகமான வாய்ப்புகள் உண்டாகும்.
இந்த பதிப்பானது மேலும் பல
விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில்
விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள்,
கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள்
போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.
அமேசான் தளத்தில் இந்த
புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.
Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.
Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.