அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஏன் செய்யப்படுகிறது?
எதற்காக இந்த அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்ய வேண்டும்? இந்த அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதால் என்ன பயன்? இந்த அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதால் கருவில் உள்ள குழந்தைக்கு ஏதேனும் பாதிப்புகள் உருவாகுமா என பலவாறாக தாய்மார்களால் கேள்வி எழுப்படுகிறது.இவற்றிக்கெல்லாம் ஒரே பதில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யாமல் குழந்தையின் துல்லிய வளர்ச்சியையோ, குறைபாட்டையோ கண்டறிய முடியாது என்பதே. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் கருப்பையின் மர்ம உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
இந்த அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனையானது மிகவும் பாதுகாப்பான, துல்லியமான, அதிக செலவு வைக்காத ஒரு பரிசோதனை என கூறலாம். எல்லா கர்ப்பிணி பெண்களின் கர்ப்ப காலத்திலும் இது முக்கிய இடத்தை வகிக்கிறது என்றே கூறலாம்.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங்கில் ஒலி அலைகள் மட்டுமே பயன்படுத்துவதால் கருவில் உள்ள குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங்கில் எவையெல்லாம் அளக்கபடுகிறது?
Crown Rump Length (CRL)அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் மூலம் குழந்தையின் தலையுச்சியில் இருந்து புட்டம் வரையிலான நீளத்தை அளப்பதாகும். இதை Crown Rump Length (CRL) என கூறுவார்கள். இதை அளப்பதன் மூலம் கருவில் உள்ள குழந்தையின் வயதை துல்லியமாக சொல்ல முடியும்.
Biparietal Diameter (BPD)
இது தமிழிலில் இருபக்க வோட்டு விட்டம் என அழைக்கபடுகிறது. இது கரு குழந்தையின் தலையின் விட்ட அளவை குறிப்பதாகும்.
Femur Lenth (FL)
இது குழந்தையின் தொடை எலும்பின் நீளத்தை குறிக்கிறது.
Abdominal Circumference (AC)
இது அடிவயிற்றின் சுற்றளவை குறிக்கிறது. இது குழந்தையின் எடையையும், வளர்ச்சியையும் குறிக்கிறது.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எப்படி வேலை செய்கிறது?
கர்ப்பபையையும், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை அறியவும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில் அதிக அதிர்வுகள் உடைய ஒலி அலைகள் பயன்படுத்தபடுகின்றன. ஸ்கேன் செய்யும் போது பெண்களின் அடிவயிற்றை தொடும்படி வைக்கபடும் Transducer எனப்படும் கருவியிலிருந்து இந்த ஒலி அலைகள் உண்டாகின்றன. இந்த கருவியிலிருந்து வெளிவரும் ஒலி அலைகள் கருவை சிறிது சிறிதாக ஸ்கேன் செய்து மீண்டும் அந்த கருவியை வந்தடைகின்றன.இவ்வாறு பெறப்பட்ட ஒலியலைகள் படமாக தெரிகிறது. இந்த படங்களை பயன்படுத்தி கரு குழந்தையின் பாகங்களை அளக்க முடிகிறது. இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் உடனே கண்டுபிடிக்க முடியும்.
ஸ்கேன் செய்யும் போது பெண்ணின் சிறுநீர்ப்பை முழுவதும் நிரம்பியிருப்பது அவசியம். அப்போதுதான் இந்த ஸ்கேன் செய்யும்போதும் துல்லியமான முடிவுகள் கிடைக்கும். அதனால் தான் ஸ்கேன் செய்ய செல்லும் போது தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என சொல்லுவார்கள்.
சில சமயங்களில் தேவைப்பட்டால் பெண்ணின் பிறப்புறுப்பின் வழியே Probe எனப்படும் கருவியை செலுத்தியும் ஸ்கேன் செய்வார்கள். இதற்கு Transvaginal Scanning என்று பெயர்.
இவை தவிர சிறப்பு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களான டாப்ளர், 3D, 4D அல்லது டைனமிக் 3D அல்ட்ராசவுண்ட் போன்றவையும் செய்யப்படுகிறது.
டாப்ளர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனானது நச்சுகொடியிலும், ரத்த குழாயிலும் ரத்தம் சரியாக பாய்கிறதா என்பதை அறியும் பரிசோதனையாகும்.
3D அல்ட்ராசவுண்ட் பரிசோதனையானது வயிற்றில் வளரும் குழந்தையின் முப்பரிமான வடிவத்தை காட்டகூடிய ஒரு பரிசோதனையாகும்.
4D அல்லது டைனமிக் 3D அல்ட்ராசவுண்ட் பரிசோதனையானது 3D பிம்பங்களுடன் கூடிய குழந்தைகளின் அசைவுகளை கண்டறியும் பரிசோதனையாகும்.
இந்த பதிப்பானது மேலும் பல
விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில்
விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள்,
கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள்
போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.
அமேசான் தளத்தில் இந்த
புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.
Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.
Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.