-->

வாக்கும் டியூப் மற்றும் போர்செப்ஸ் பிரசவ முறைகள்

பிரசவ முறைகள்

பிரசவம் என்பதே பெண்களுக்கு மறுபிறவி என்று சொல்லுவார்கள். பெண்கள் தங்கள் குழந்தைகளை பிரசவிக்க தங்கள் உயிரை பணயம் வைத்து  திரும்ப பெறுகிறார்கள். பெண்களின் பிரசவம் பொதுவாக சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் என்ற இரண்டு முறைகளில் நடந்து வருகிறது. சிசேரியன் முறையில் வாக்கும் டியூப், போர்செப்ஸ் போன்ற முறைகளும் பயன்படுத்தபடுகின்றன.

வாக்கும் டியூப் பிரசவம்

பிரசவத்தின் போது குழந்தையை தாயால் இயற்கையாக வெளியே தள்ள முடியாத நிலை அல்லது குழந்தை பிறப்புறுப்பில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டால் அந்த சமயத்தில் குழந்தையை வெளியே எடுக்க வாக்கும் டியூப் பிரசவ முறை உபயோகபடுத்தபடுகிறது.

வாக்கும் டியூப் பிரசவம் எவ்வாறு செய்யபடுகிறது


வாக்கும் டியூப் பிரசவம் என்றால் என்ன?

வாக்கும் டியூப் பிரசவம் என்பது ஒரு அழுத்தம் கொடுக்கும் கருவியின் முனையில் ஒரு குழாயை மாட்டி வைத்திருப்பர்கள். குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு குழந்தை வெளி வர முடியாத நிலை ஏற்பட்டால், இந்த வாக்கும் டியூபை தாயின் பிறப்புறுப்பில் செலுத்தி குழந்தையின் தலையை வெளியே இழுக்க முயற்சிப்பார்கள் மருத்துவர்கள். இந்த முறையில் குழாயானது குழந்தையின் தலையை பற்றி வெளியே கொண்டு வந்து விடும்.

வாக்கும் டியூப் பிரசவத்தை மருத்துவர்கள் எப்போது கையாள்வார்கள்?

இந்த பிரசவ முறையை மருத்துவர்கள் கையாளும் முறை என்று பார்த்தால் கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு பல மணி நேரங்களாக குழந்தை வெளி வரவில்லை எனில் இந்த முறையை கையாள்வர்கள். குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்தாலும், குழந்தை வயிற்றில் நிலை மாறி இருந்தாலும், குழந்தையானது தாயின் பிறப்புறுப்பை சரியாக வந்தடைய முடியாத நிலையில் இருக்கும் போதும் இந்த  வாக்கும் டியூப் பிரசவ முறையை கையாள்வர்கள்.


இந்த முறையை கையாள்வதால் தாய்க்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

வாக்கும் டியூப்பை உபயோகித்து குழந்தையை எடுப்பதால், தாய்க்கு பிறப்புறுப்பில் அதிகமான வலி மற்றும் சிறு காயங்கள் ஏற்படலாம். தாயின் சிறுநீரக உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படும். தசைகள் பலமிழத்தல், அல்லது  தசையானது கிழிவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

போர்செப்ஸ் பிரசவம் என்றால் என்ன?

போர்செப்ஸ் என்பது ஒரு ஸ்டெயின்லஸ் ஸ்டீலினால் செய்யப்பட்ட ஒரு கருவியாகும். குழந்தை பிறப்புறுப்பு பாதையில் இருந்து வெளியே வர சிரமப்படும்போது மருத்துவர் இந்த கருவியை குழந்தையின் தலையை இருபுறமும் பற்றும்படி செய்து அதன் உதவியோடு குழந்தையை வெளியே கொண்டு வருவார். இவ்வாறு போர்செப்ஸ் கருவியானது குழந்தை பிறக்க உதவியாக உள்ளது.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.



அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.  


Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.

Previous Post Next Post