-->

ஆண் குழந்தை பிறக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

ஆண் குழந்தை பிறக்க

விஞ்ஞானமானது கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், குழந்தை பிறப்பு பற்றிய உண்மைகளை தெளிவாக கூறுகிறது. மனித உடலிலுள்ள இனப்பெருக்க அணுக்களில் உள்ள குரோமோசோம்கள் தான் பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணியிக்கின்றன.

பெண் குழந்தை பெற்றுவிட்டால் அந்த பெண்ணை வெறுக்கும் குடும்பத்திற்கு இந்த உண்மை ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஆம், உண்மையில் பிறக்க போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தீர்மானிப்பதே ஆண்தான். கருமுட்டையின் உள்ளே செல்லும் ஆணின் உயிரணுவில் உள்ள குரோமோசோம்கள்தான் அதை தீர்மானிக்கிறது. அதுவும் ஆணின் உயிரணுவும் சினைமுட்டையும் சேரும் அந்த வினாடியே இது முடிவு செய்யப்படுகிறது.

ஆண் குழந்தை பிறக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்

ஆனால் இந்த உண்மை தெரியாமல் காலம் காலமாக பெண்களையே வசை பாடி வருகிறது இந்த சமுகம். சரி ஆண் மற்றும் பெண் குழந்தைகளை பெற என்ன மாதிரியான உணவு வகைகளை எடுத்து கொள்ள வேண்டும், அறிவியல் முறைப்படி என்னென்ன பின்பற்ற வேண்டும் என்பதை இந்த பகுதியில் விரிவாக காண்போம்.

ஆண் குழந்தை பிறக்க உணவு வகைகள்

அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஆண் குழந்தை மோகம் பலரையும் வாட்டி வதைக்கிறது. ஆண் குழந்தை தான் வேண்டும் என எல்லோரும் விரும்புகின்றனர். இதில் பெண்களும் விதிவிலக்கல்ல. ஆனால் ஆசைபட்டதெல்லாம் நடந்து விடுமா? அப்படி ஆண் குழந்தை தான் வேண்டும் என நினைக்கும் பெண்கள், கர்ப்ப காலத்தில் ஆரம்பத்தில் கட்டாயம் காலை உணவை எடுத்து கொள்ள வேண்டும் என மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

கருத்தரித்த பெண்கள் நல்ல சத்தான உணவுகளை நேரம் தவறாமல் சாப்பிடவேண்டும். ஒரேடியாக இல்லாமல் சிறிய கால இடைவெளிகளில் நான்கு முதல் ஐந்து வேளை வரை உணவு சாப்பிடலாம் என கூறுகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண் சாப்பிடும் உணவின் தன்மைதான் வயிற்றில் உருவாக போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தீர்மானிக்கும், மேலும் அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் முடிவு செய்யும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளார்கள்.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட ஒரு பிரபல பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், ஒரு பெண் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் காலை வேளை உணவை நேரம் தவறாமல் சாப்பிடுவதும், கொழுப்பு சத்து மிகுந்த உணவையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளனர்.

தாம்பத்தியத்தின் போது ஆணின் X குரோமோசோம், பெண்ணின் X குரோமோசோமுடன் இணைந்து X-X அல்லது Y-Y என்ற வகையில் X-X / Y-Y என்று வகையில் இணைந்தால் பிறக்க உள்ள குழந்தை ஆணாகவும், அவ்வாறு இல்லாமல் X-Y என்று இணைந்தால் பிறக்க போகும் குழந்தை பெண்ணாகவும் இருக்கும் என கூறுகிறது. மேலும் (23X-23X) / (23Y-23Y)/(23X-23Y) என்று இணையாமல் ஒன்று கூடியோ, குறைந்தோ இணைந்தால் பிறக்கும் குழந்தை திருநங்கையாகவோ, ஊனத்துடனோ பிறக்கும் என்று மருத்துவம் கூறுகிறது.

அதெல்லாம் சரி எனக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் அதற்கு வழி உண்டா என கேட்டால், அதற்கும் உண்டு என பதில் கூறுகிறது மருத்துவம். அதாவது பிறக்க உள்ள குழந்தை ஆணாக இருக்க கீழ்கண்ட உணவுபொருட்களை கர்ப்பம் தரிப்பதர்க்கு முன் எடுத்து கொள்ள வேண்டும் என கூறுகிறது மருத்துவம்.

1. வாழைப்பழம்

ஆண் குழந்தை பெற வாழைபழம்

இந்த பழத்தில் பொட்டாசிய சத்து அதிகம் உள்ளதால், வாழைபழத்தை தவறாமல் உட்கொண்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என அறிவியல் கூறுகிறது. பொட்டாசியமானது கருப்பையினுள் செல்லும் விந்தணுக்களில் ஆண் குழந்தையை பிறக்க உதவியாக இருக்கும் வண்ணம் கருப்பையில் வேதியல் மாற்றத்தை உருவாக்குகிறது. ஒரு நாளைக்கு 2 வாழைப்பழத்தை சாபிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

2. சீரியல்ஸ்

ஆண் குழந்தை பிறக்க சாப்பிட வேண்டிய காலை உணவுகள்

ஆண் குழந்தை பிறக்க அதிக ஊட்டச்சத்து தேவைபடுகிறது. இதனால்  ஊட்டச்சத்துக்கள் அதிக அளவு உள்ள சீரியல்ஸ்ஐ காலை உணவில் சேர்த்து கொண்டால், ஆண் குழந்தை பிறக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளதாம்.

3. காளான்

விந்தணுவின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி சத்து மிகவும் தேவையான ஒன்று. அந்த வைட்டமின் டி ஆனது காளானில் அதிகம் இருப்பதால், இதனை கணவன் மனைவி ஆகியோர் உணவில் சேர்த்து வரவேண்டும்.

4. சிட்ரஸ் பழங்கள்

பெண்ணின் ஆரோக்கியத்தையும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகபடுத்தவும் வைட்டமின் சி சத்தானது அதிகம் தேவை. வைட்டமின் சி சத்தானது சிட்ரஸ் பழங்களான அரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றில் நிறைந்து காணப்படுகிறது.

காளான் உணவுகள்

5. ஸ்டார்ச் உணவுகள்

குளுக்கோஸ் நிறைந்த உணவுகளான சாதம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை குறிப்பிட்ட அளவு உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கலோரிகள் மற்றும் குளுக்கோஸின் அளவு குறிபிடத்தகுந்த விதத்தில் அதிகரிக்கும். இது ஆண் குழந்தை பிறக்க அத்தியாவசியமான ஒன்றாகும்.

6. கடல் உணவுகள்

ஆணின் விந்தணுவின் அளவு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிங்க் சத்து நிறைந்த உணவுகள் அவசியம் தேவை. ஆண்களின் விந்தணுவின் அளவானது எவ்வளவு அதிகமாக கருப்பையில் செல்கிறதோ அதைப் பொறுத்து தான் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே ஜிங்க் சத்து நிறைந்த கடல் உணவான கடல் சிப்பியை ஆண்கள் நிறைய எடுத்து கொள்ள வேண்டும்.

6. உப்பு நிறைந்த உணவுகள்

ஆண் குழந்தை பிறக்க உதவும் கடல் சிப்பி

சோடியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள் ஆண் குழந்தை பிறக்க உதவி உதவிகரமாக இருக்கும். எனவே கருத்தரிப்பதற்கு முன் சோடியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். கருத்தரித்த பின் உப்புள்ள உணவுகள் எடுத்து வருவதை சிறிது சிறிதாக குறைத்து விட வேண்டும். இல்லையெனில் கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.


இந்த உணவு வகைகளை நீங்கள் கடைபிடித்து வந்தால் நீங்கள் ஆசைப்பட்டது போல உங்களுக்கு ஆண் வாரிசு உண்டாகும். அதே போல பெண் குழந்தை பிறக்க இந்த உணவு வகைகளை நீங்கள் சாப்பிட வேண்டும்.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.



அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.  


Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.

Previous Post Next Post