பிரசவத்தில் பெண்ணுறுப்பில் அறுவை சிகிச்சை ஏன் செய்யபடுகிறது?
இயற்கை பிரசவ முறையில் குழந்தை வெளி வருவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் பெண்ணுறுப்பை அகலபடுத்த சிறிய அறுவை சிகிச்சை செய்யபடுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறைக்கு எபிசியாடமி (Episiotomy) என்று பெயர்.குழந்தையானது அளவில் பெரியதாக இருந்தாலோ, பிரசவத்தின் போது குழந்தையை வெளிதள்ளுவதில் தாய்க்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர் செய்வார். இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டவுடன் குழந்தையின் தலை எந்த வித இடையூறும் இல்லாமல் பிறப்புறுப்பில் நகர்ந்து வரும். குழந்தையின் தலை வெளியே வந்ததும் மருத்துவர் விரைந்து செயல்பட்டு குழந்தையை வெளியே எடுத்து விடுவார்.
இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பிறப்புறுப்பின் கீழேயுள்ள பெரினியும் என்னும் தசைபகுதி சுருங்கி விரியாமல் இருப்பதே ஆகும். பிரசவத்தின் போது இந்த பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை செய்து பிறப்புறுப்பின் அகலம் அதிகபடுத்தபடுகிறது. அறுவை சிகிச்சை செய்யாமல் போனால் பிரசவத்தின் அழுத்தம் காரணமாக இந்த பெரினியும் பகுதி கிழிவதற்கு வாய்ப்பு உண்டு. இதனால் மிக மோசமான காயங்கள் ஏற்படலாம்.
மயக்க மருந்து கொடுத்து இந்த அறுவை சிகிச்சை செய்யபடுகிறது. பொதுவாக சுகபிரசவமான பெண்களில் 45% பேருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்வது அவசியமாகிறது. குழந்தை பிறந்ததும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் மருத்துவர்கள் தையல் போடுவார்கள். இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் முதல் ஒரு சில நாட்களுக்கு அந்த பகுதியில் வலி அதிகமாக இருக்கும். நாட்கள் செல்ல செல்ல வலி குறைந்து விடும்.
இந்த பதிப்பானது மேலும் பல
விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில்
விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள்,
கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள்
போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.
அமேசான் தளத்தில் இந்த
புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.
Google
Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.