-->

சுகபிரசவம் என்றால் என்ன? சுகபிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும்?

சுகபிரசவம் என்றால் என்ன?

கர்ப்பப்பை சுருங்கி விரிந்து அதன் மூலம் குழந்தை பிறப்பதையே சுகபிரசவம் என்கிறோம். குழந்தை பிறப்புறப்பின் மூலம் பிறந்தால் நார்மல் எனவும், அறுவை சிகிச்சை மூலம் பிறந்தால் சிசேரியன் என்றும் கூறுவார்கள்.
பிரசவ நேரம் என்பது பெண்ணிற்கு பெண் மாறுபடும். உண்மையான பிரசவ வலியானது எவ்வளவு நேரம் நீடிக்கும், வலி எவ்வாறு அதிகரிக்கும் என்பது பெண்ணை பொருத்து மாறுபடும்.

சுகபிரசவம் ஆக நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதும், முறையான உடற்பயிற்சிகளையும் செய்வது மிகவும் அவசியம். அப்போது தான் சுக பிரசவமானது எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் நல்லபடியாக நடக்கும்.

சுகபிரசவம் எப்படி நடைபெறுகிறது

சுகபிரசவத்தின் நிலைகள்

பொதுவாக சுகபிரசவமானது 3 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது அவை,

முதல் நிலை பிரசவம்: இந்த நிலையில் கர்ப்பப்பையின் வாயானது மூடிய நிலையிலோ அல்லது சிறிது திறந்த நிலையிலோ இருக்கும். கர்ப்ப பை வாயானது முடிய நிலையிலிருந்து 10cm வரை திறக்கும். இதற்கு சில மணி நேரங்கள் ஆகலாம்.

இரண்டாம் நிலை பிரசவம் : இந்த நிலையில் கார்ப்பபையின் வாயானது முழுவதும் திறந்தே இருக்கும். இந்த நிலையில் அதிகபட்சம் 2 மணி நேரம் நீடிக்கும். இது பெண்ணிற்கு பெண் மாறுபடும். இந்த நிலையில் தான் குழந்தை பிறப்பு நிகழும்.

சுகபிரசவம் ஆக வழிகள்


மூன்றாம் நிலை பிரசவம் : இதுதான் மிக குறைந்த நேரமே எடுக்கும் நிலையாகும். இந்த நிலையில் நச்சுக்கொடி குழந்தையிடமிருந்து  பிரித்தெடுக்கப்படும்.

அவ்வளவு தான் உங்களுக்கு குழந்தை பிறந்து விட்டது. இவ்வளவு நாள் நீங்கள் பட்ட வலி வேதனை முதலியவை உங்கள் குழந்தையை பார்த்தவுடன் காணாமல் போகும் உணர்ச்சி பூர்வமான தருணம் அது.


பிரசவ வகைகள்

சிசேரியன் அறுவை சிகிச்சை

கர்ப்பிணிக்கு இயற்கை முறையான பிறப்புறுப்பு வழியாக பிரசவம் நிகழாமல், அடிவயிற்று பகுதியில் ஒரு வெட்டை ஏற்படுத்தி பிரசவம் பார்க்கும் முறைதான் சிசேரியன் முறை.

குழந்தையானது இயற்கையான முறையில் பிரசவிக்க முடியாமல் போனாலும், அல்லது இயற்கை வழியில் பிரசவம் நிகழ்ந்தால் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ பாதிப்பு ஏற்படும் என கருதினாலும் சிசேரியன் அறுவை சிகிச்சை முறை செய்யபடுகிறது.

பிரசவமானது சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் என்னும் இரண்டு முறைகளில் நடந்து வருகிறது. சிசேரியன் முறையில் வாக்கும்டியூப், போர்செப்ஸ் போன்ற முறைகளும் பயன்படுத்தபடுகின்றன.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.


அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.  


Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.

Previous Post Next Post