தாய்பால் ஏன் மிக சிறந்தது?
தாய்ப்பால் என்பது மற்ற உணவு வகைகளை விட ஒரு சத்து நிறைந்த சத்துணவு ஆகும். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தை மற்றும் அம்மா இருவரின் ஆரோக்கியம் மேம்படும். தாய்பால் குடிக்காத குழந்தைகளுடன் ஒப்பிடும்போது தாய்பால் குடிக்கும் குழந்தைகளை குறைந்த அளவே நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. குழந்தை பிறந்த முதல் 3 நாட்களுக்கு சீம்பால் மட்டுமே சுரக்கும். அதன் பிறகு தான் பால் சுரக்க ஆரம்பிக்கும்.குழந்தை பிறந்த முதல் 6 மாதங்கள் வரை தாய்மார்கள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பது என்பது குழந்தைகளுக்கு வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுக்கும் அதி அற்புத மருந்தாகும். தாய்ப்பாலில் குழந்தையின் ஜீரணத்திற்கு உதவி செய்யும் சத்துக்கள் நிறைந்துள்ளது. தாய்ப்பால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத் சக்தியை அதிகமாக்கும். மேலும் ஆஸ்துமா போன்ற நோய்கள் உண்டாவதைத் தடுக்கும்.
தாய்ப்பால் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகமாக்குகிறது. ஏனெனில் தாய்ப்பாலில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன.
தாய்பால் கொடுப்பதால் அம்மாக்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
1. தாயானவள் குழந்தைக்கு நீண்ட நாட்களுக்கு தாய்பபால் கொடுத்தால் அவரின் உடல் குண்டாவது தொடக்கதிலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.2. தாய்ப்பால் கொடுப்பதால் இரத்தம் சம்பந்தமான கேன்சர், சர்க்கரை வியாதி மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
3. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் உடல் எடையானது விரைவில் குறைய ஆரம்பிக்கும்.
4. பெண்களின் மன அழுத்தத்தையும் மற்றும் குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கையும் குறைக்கும்.
5. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு
6. தாய்ப்பால் கொடுப்பதால் அம்மா குழந்தையிடையே நல்ல உறவு ஆரம்பத்திலேயே ஏற்படும்.
எப்பொழுது தாய்ப்பால் கொடுக்க துவங்க வேண்டும்?
குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் ஏன் கொடுக்க வேண்டும் தெரியுமா?
1. குழந்தையானது பிறந்த 30-60 நிமிடங்களில் சுறுசுறுப்பாக இருக்கும்.2. அந்த சமயம் குழந்தையின் பால் குடிக்கும் தன்மை மிக அதிகமாக இருக்கும்.
3. குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து சீம்பால் என்னும் பால் சுரக்க ஆரம்பிக்கும். இந்த சீம்பாலில் குழந்தைக்குத் தேவையான அனைத்து நோய் எதிர்ப்பு சக்தியும் அடங்கியுள்ளன. சீம்பாலானது குழந்தையை நோய் தாக்குதலிலிருந்து காக்கிறது.
4. தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைத் தடுக்கிறது. அதே போல குழந்தை பேறுக்குப் பின் ஏற்படும் ரத்தபோக்கை குறைக்கும்.
5. தாய்பால் அதிகமாக சுரக்க உதவும்.
6. கர்ப்பத்தின் போது பெரிதான கர்ப்பப்பை தாய்பால் கொடுப்பதால் விரைவில் சுருங்க ஆரம்பித்து மீண்டும் தன் பழைய நிலையை அடையும்.
சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற தாயும் தாய்ப்பால் உடனடியாக கொடுக்க துவங்கலாம்.
தாய்ப்பாலுக்கு பதில் வேறு எதாவது பால் கொடுக்கலாமா?
குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஒரு சிலரால் தவிர்க்க முடியாத காரணத்தால் தாய்பால் கொடுக்க முடிவதில்லை. ஒருவேளை உங்களுக்கு பால் சுரப்பு குறைவாக உள்ளது போல தோன்றினால் உங்கள் மகபேறு மருத்துவரை சந்தித்து அவர் அறிவுறுத்தலின் பேரில் பால் பவுடரை கொடுக்கலாம் அல்லது அதிக பால் சுரக்க சில இயற்கை வழிகளை பின்பற்றலாம் தாய்பாலை தவிர்த்து சர்க்கரை தண்ணீர், பால் பவுடர், பசும்பால் போன்றவற்றை மருத்தவரின் அனுமதியில்லாமல் கொடுக்க கூடாது.பசும்பால் கொடுப்பது சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. மேலும் பசும்பால் ஜீரணமாக அதிக நேரம் எடுத்து கொள்ளும். தாய்ப்பால் கொடுப்பதே 100 சதவீதம் பாதுகாப்பானது.
இந்த பதிப்பானது மேலும் பல
விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில்
விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள்,
கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள்
போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.
அமேசான் தளத்தில் இந்த
புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.
Google
Play Storeல் இந்த புத்தகத்தை
பெற இங்கே click செய்யவும்.