அவரைக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
நம் உணவில் காய்கறிகளை அதிக அளவில் தினமும் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த
ஒன்றாகும். குறிப்பாக பச்சைக் காய்கறிகளை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்த வகையான காய்கறிகளில் ஒன்று தான் அவரைக்காய்.
அவரைக்காயில் நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு,
தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை
மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. முற்றிய அவரைக்காயை உணவாக எடுத்துக்கொள்ளாமல் இளகிய அவரைக்காயை எடுத்துக் கொள்வதே நல்லது..
அவரைக்காயின் மருத்துவப் பயன்கள்
- அவரைக்காய் நுரையீரலுக்கு செல்லும் ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான இரும்பு சத்தை கொடுக்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்கிறது.
- புற்று நோய் வராமல் தற்காத்து கொள்ளும் விட்டமின் சி அவரைக்காயில் நிறைய உள்ளது.
- அவரைக்காய் உணவை விரைவில் செரிக்க செய்யும் ஆற்றல் கொண்டது. அவரைக்காயில் இருக்கும் நார் சத்து மற்றும் கால்சியம் எலும்புகளுக்கு உறுதி அளிக்க கூடியது.
- ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய கூடிய அவரைக்காய், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
- மன அழுத்தத்தை போக்கி நிம்மதியான மன நிலையை கொடுக்கும் தன்மை கொண்டது அவரைக்காய்.
- ரத்த ஓட்டம் சிறப்பாக அமைய தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கி உள்ளன. இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து, சர்க்கரையின் அளவை கட்டு படுத்தும்.
- உடலுக்கு ஆரோக்கியத்தை தர கூடிய அனைத்து விட்டமின்கள் கொழுப்பு சத்துக்களும் அவரைக்காயில் அடங்கி உள்ளது.
- அவரைக்காய் பசியை கட்டு படுத்தும் தன்மை கொண்டது.
- அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும்.
- அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
- இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால், இதனை இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
- அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை சரியாகும்.
- மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. மேலும் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.