குடைமிளகாய்
குடைமிளகாய் கடைகளில் எளிதில்
கிடைக்கும் ஒரு காய்கறியாகும். குடைமிளகாயானது பொதுவாக பச்சை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது. குடைமிளகாயில்
மிகுதியான அளவு வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் அடங்கி உள்ளது. மற்ற மிளகாய் வகைகளை போல
இல்லாமல் குடைமிளகாய் காரமற்றது. மேலும் தனது அழகான நிறங்களால் உணவுகளுக்கு
அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை.
குடைமிளகாயில், ப்ராஸ்டேட் எனப்படும் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின்
செயல்பாட்டை குறைக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம்
கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் குடைமிளகாயை கூடுமானவரை உணவில் சேர்த்து கொள்வது
நல்லது.
குடைமிளகாயனது நமது இரத்தத்தில்
உள்ள சர்க்கரை அளவை கட்டுபடுத்தி நீரிழிவு நோய் உண்டாவதை கட்டுப்படுத்துகிறது.
குடைமிளகாயில் கலோரி மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், உடலில் தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல்
தடுக்கும். குடைமிளகாயில் உள்ள கேயீன் என்னும் வேதிப்பொருள், நமக்கு ஏற்படும் பல்வேறு விதமான உடல் வலிகளைக் குறைக்கிறது.
குடைமிளகாயனது வயது முதிர்வை
தடுக்கும் தன்மை உடையது. நமது தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு
வலிக்கு மருந்தாகிறது. பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் நிறைந்து உள்ளது.
100 கிராம் குடை மிளகாயில் அடங்கியுள்ள சத்துக்கள்:
புரோட்டின் – 0.99 கிராம். சக்தி – 31 கலோரி. சோடியம் – 4 மி.கிராம். கொலஸ்ட்ரால் – இல்லை. கொழுப்பு – 0.3 மி.கிராம். தாதுச் சத்து – 6.02 மி.கிராம். பொட்டாசியம் – 211 மி.கிராம். மெக்னீசியம் – 12 மி.கிராம். வைட்டமின் சி – 127.7 மி.கிராம். கால்சியம் – 7 மி.கிராம். இரும்பு – 0.43 மி.கிராம்.
குடைமிளகாயின் மருத்துவப் பயன்கள்
1. குடைமிளகாயில் நல்ல கண்
பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது.
2. குடைமிளகாயை தொடர்ச்சியாக உணவில்
சேர்த்து வந்தால், கண்
சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
3. குடைமிளகாயானது அஜீரணக் கோளாறை
நீக்கும் மற்றும் செரிமான சக்தியை தூண்டும் சக்தியை கொண்டது.
4. நீரிழிவு, மற்றும் உடல்பருமன் நோய்களைக் கட்டுப்படுத்தும் சக்தி
கொண்டது குடைமிளகாய்.
5. குடைமிளகாய் வாதம் தொடர்புடைய
நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது.
6. வாய்ப்புண்களை ஆற்றும் சக்தி
கொண்டது குடைமிளகாய்.
7. பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவைகளை கட்டுப்படுத்தும் சத்துக்கள்
குடைமிளகாயில் நிறைந்து காணப்படுகிறது.