-->

எலுமிச்சையில் மறைந்திருக்கும் மருத்துவ ரகசியங்கள்


எலுமிச்சை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

எல்லா காலங்களிலும் மலிவாக கிடைக்கும் மருத்துவ குணம் நிறைந்த ஒரே கனி எலுமிச்சை பழமாகும். தலைமுடி பிரச்சனை,சரும பிரச்சனை போன்ற உடலின் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளுக்கு பெரிதும் பயன்படுவது எலுமிச்சையின் தனிச்சிறப்பாகும்.

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன.

நம் சமையல் அறையில் அதிகம் பயன்படும் ஒரு பொருளாக எலுமிச்சை உள்ளது. பெண்கள் எலுமிச்சையை அதிக அளவில் எடுத்துக்கொள்வதால் இரும்புச்சத்து அதிகம் கிடைக்கிறது. தொற்றுநோய்களை உண்டு பண்ணும் கிருமிகளை அழித்து சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.

எலுமிச்சையில் நிறைந்துள்ள சத்துக்கள்

  1. நீர்ச்சத்து - 50 கிராம்
  2. கொழுப்பு - 1.0 கிராம்
  3. புரதம் - 1.4 கிராம்
  4. மாவுப்பொருள் - 11.0 கிராம்
  5. தாதுப்பொருள் - 0.8 கிராம்
  6. நார்ச்சத்து - 1.2 கிராம்
  7. சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
  8. பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
  9. இரும்புச் சத்து - 0.4 மி.கி.
  10. கரோட்டின் - 12.மி.கி.
  11. தையாமின் - 0.2 மி.கி.
  12. நியாசின் - 0.1 மி.கி.
  13. வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
  14. வைட்டமின் பி - 1.5 மி.கி.
  15. வைட்டமின் சி - 63.0 மி.கி

எலுமிச்சையின் மருத்துவ பயன்கள்

  1. எலுமிச்சை சாறை தினமும் குடிப்பதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாகி உடல் தூய்மை அடையும்.
  2. எலுமிச்சைபழ சாற்றை தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் வறட்சி நீங்கி தோல் நோய்கள் வராமல் தடுக்கும்.
  3. எலுமிச்சம் பழச்சாறு சோம்பலை போக்கி உடலுக்கு புத்துணர்வை கொடுக்கிறது.
  4. இரவு படுக்கும் முன்பு எலுமிச்சை சாற்றினைச் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் அஜீரணம், வயிற்றுக் கடுப்பு , உணவு உண்ட பின் ஏற்படும் வயிறு உப்பசம் போன்றவை அகலும்.
  5. தேநீரில் எலுமிச்சைச் சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி நீங்கும்.
  6. எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகச்சுருக்கங்கள் மறையும்.
  7. கர்ப்பிணி பெண்கள் எலுமிச்சை சாறை குடித்து வந்தால் மசக்கையால் ஏற்படும் வாந்தி,மயக்கம் நின்று விடும்.
  8. எலுமிச்சை சாறை தலையில் தேய்த்து நன்கு ஊறிய பின் குளித்தால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.
  9. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் எலுமிச்சை சாறை தேனில் கலந்து குடித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
  10. நீர்க்கடுப்பு பாதிப்பு உள்ளவர்கள் எலுமிச்சை சாறை உப்பு கலந்து குடித்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
  11. எலுமிச்சை சாறோடு சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.
  12. இரவு உணவிற்கு பின் சிறிது எலுமிச்சை சாறு குடித்து விட்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும்.
  13. எலுமிச்சையில் உள்ள விட்டமின் ‘c’ உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
  14. நம் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த எலுமிச்சை பயன்படுகிறது.
  15. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி எலுமிச்சை சாறை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் சீரான நிலை அடையும்.


Previous Post Next Post