-->

கணவனின் ஆயுளை அதிகரிக்கும் குங்குமத்தின் மகிமைகள்

பெண்கள் நெற்றியில் ஏன் குங்குமம் வைக்கிறார்கள்?

பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. நெற்றியில் இடும் குங்குமத்தில் பல்வேறு அர்த்தங்கள் அடங்கியுள்ளன. ஒரு பெண் திருமணம் ஆனவள் என்பதை நெற்றி வகிட்டில் வைத்திருக்கும் குங்குமத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். 

இரண்டு  புருவத்திற்கும் மத்தியில் உள்ள இடம் நெற்றி பொட்டு என அழைக்கப்படுகிறது. நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் அதுவே. நெற்றி வகிடு மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நாம் கவலையாக இருக்கும் போது  தலைவலி அதிகமாவதை உணரலாம்.

நெற்றியில் இடும் குங்குமம் அந்தப் பகுதியைக் குளிர்ச்சியடைய செய்கிறது. மேலும் நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. நெற்றியில் குங்குமம் வைப்பது மங்களதிர்க்காக மட்டும் இல்லாமல் தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நமக்கு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

கடவுளின் அடையாளமான குங்குமத்தை நாம் நெற்றியில் கடவுள் நம்முடனே இருக்கிறார் என நம்புகிறோம். நம் செயல்பாடுகளில் உண்மை நிறைந்து காணப்படும். நெற்றியில் இருக்கும் குங்குமம் லட்சுமிகடாட்சத்தை உண்டாக்கும் ஆற்றலை கொண்டது.

நெற்றியில் குங்குமம் வைக்கும் போது மகாலட்சுமியே போற்றிஎன்று சொல்லியபடி வைத்துக் கொள்வது பெண்களுக்கு நலம் பயக்கும். குங்குமத்தை மோதிர விரலால்தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களை பயன்படுத்தக்கூடாது.

பெண்கள், தலை வகிடிலும், மாங்கல்யத்திலும், நெற்றியிலும் பொட்டு வைக்கிறார்கள். இந்த மூன்று இடங்களிலுமே லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டு கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பது தவறாகும். வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போட சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.

குங்குமத்தின் மகிமைகள்

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

 2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசமான வகிட்டில் ஸ்ரீமகாலட்சுமி வாசம் செய்யும் இருப்பிடமாகும். சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

 3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

 4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

 5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

 6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

 7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

 8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.


குங்குமத்தின் தெய்வீக பண்புகள்


 9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

 10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

 11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

 12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.
Previous Post Next Post