கருப்பை வலுப்படுத்தும் கருப்பட்டி வெந்தயக் கஞ்சி
கருப்பட்டியும்,
வெந்தயமும் உடலில் உள்ள சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. பெண்கள்
இந்த கஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறுவதோடு கருப்பை பலம்
பெரும்.
வாரத்திற்கு
ஒரு முறை இந்த கஞ்சியை குடித்து வந்தால் சூட்டினால் ஏற்படும் பாதிப்புகள்
அனைத்தும் நீங்கி உடல் நன்கு சுறுசுறுப்பாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி -1 கப்
- தேங்காய் - 1
- பூண்டு -15 பல்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- கருப்பட்டி – 1/4 கிலோ
செய்முறை:
- பச்சரிசியை ஊறவைத்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- ஊறவைத்த பச்சரிசியுடன் பூண்டு, வெந்தயம் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.
- கஞ்சி பதத்திற்கு வரும் வரை நன்கு கைவிடமால் கிளறி விடவும்.
- தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
- தேங்காய்ப்பாலைக் குழைந்த பச்சரிசிக் கஞ்சியில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- மற்றொரு பாத்திரத்தில் கருப்பட்டியை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- வடிகட்டிய கருப்பட்டி கரைசலை கஞ்சியுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- சுவையான கருப்பட்டி வெந்தயக் கஞ்சி ரெடி.