-->

காளான் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

காளான்

காளான் என்பது மண்ணில் வளரும் ஒரு பூஞ்சைத் தாவரமாகும். உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி சாப்பிடப்படும் உணவான காளான் எல்லா வித சூழ்நிலைகளிலும் வளரக் கூடிய ஒரு தாவரமாகும். உலகின் பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இவை குடிசைத் தொழிலாக, செயற்கையாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. காளான்களில் பல்வேறு வகைகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு சில மட்டுமே சாப்பிடுவதற்கு உகந்தது ஆகும். பல காளான்கள் நச்சு தன்மை கொண்டவையாக உள்ளன.

சிப்பி காளான் பயன்கள்


முக்கியமாக மூன்று வகையானயான காளான்கள் மட்டுமே சாப்பிடப்படுகின்றன. அவை மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் போன்றவை ஆகும். இதில் ஒவ்வொரு காளானும் பல்வேறு சிறப்பான பயன்களைத் அள்ளி தருகின்றது.

மேற்சொன்ன இந்த மூன்று காளானுமே புற்று நோயை தடுக்கும் ஆபார சக்தி கொண்டவை. எய்ட்ஸ் நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக வைக்கோல் காளான் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஃப்ளோரிடா பல்கலைக் கழகத்தில் நடந்த காளான் பற்றிய ஆய்வில், 4 வாரங்கள் இந்த காளான் உணவுகளை சாப்பிட்டு வந்தால், ஒரு மாதத்தில் ஆரோக்கியம் மேம்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சரி காளான்களின் முக்கியமான மருத்துவ பயன்களை பற்றி தெரிந்து கொள்வோமா,
  

காளானின் மருத்துவ பயன்கள்:

1. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
2. காளானில் உள்ள தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் தன்மை கொண்டது.
3. காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
4. காளனானது மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

நல்ல காளான் நன்மைகள்

5. காளான் எளிதில் ஜீரணமாகும் தன்மையை கொண்டது.
6. காளான் மலச்சிக்கலைத் தீர்க்கும் அற்புத மருந்தாகும்.
7. மெலிதான உடல் அமைப்பை கொண்டவர்கள் தினமும் காளான் சூப் சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் பலம் பெரும்.
8. ரத்த சோகை கொண்டவர்கள் காளானை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை குறைபாடு நீங்கும்.
9. சர்க்கரை நோய் உடையவர்கள் காளான் சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு சரியான விகிதத்தில் கட்டுபடுத்தப்படும்.
10. காளான் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாது.    

யாரெல்லாம் காளான் சாப்பிடகூடாது

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. சில வகை காளான்களை மட்டுமே உண்ணலாம். சிலவகை காளான்கள் போதையை உண்டாக்கும் தன்மையை கொண்டது. மேலும் சில வகை காளான்கள் பயங்கர விஷத் தன்மை கொண்டவையாகும். ஆனால் இவை பார்பதற்கு ஒன்று போலவே தோன்றும். ஆகவே, கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

நச்சு காளானை கண்டறிவது எப்படி

விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணம் உடையதாகவும் இருக்கும். இவற்றை வைத்து விஷ காளான்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

ஒரு வேளை தெரியாமல் விஷக்காளானை சாப்பிட்டு விட்டால் உடனே தாமதிக்காமல் சோம்புக் கஷாயம் குடித்து விட வேண்டும். ஏனெனில் சோம்புக்கஷாயமானது, பாம்பின் விஷம், காளான் விஷம் இவற்றை முறிக்கும் தன்மை கொண்டதாகும்.


Previous Post Next Post