தனது சந்ததியினருக்கு
சொத்து சேர்த்து வைப்பதை விட புண்ணியம் சேர்த்து வைப்பது மிகவும் அவசியமாகும்.
எதையும் எதிர்பாராமல் பிறருக்கு நாம் செய்யும் தானம் நமக்கு மிகப்பெரிய
புண்ணியத்தை தேடித் தரும்.
தான,தர்மம் செய்வதின் மூலம் அத்தகைய புண்ணியத்தை பெற முடியும். தானங்களில் பல
வகைகள் உண்டு, அதில் எந்த தானத்திற்கு என்ன பலன் என்று பார்க்கலாம் வாருங்கள்.
அன்னதானம்
அன்னதானம்
செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும் . பித்ருக்களின் ஆசிர்வாதம்
கிடைக்கும்.தானங்களில் சிறப்பு வாய்ந்தது அன்னதனமாகும். ஒருவரின் பசியை
போக்குவதற்கு நிகரான தானம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. போதும் என்று
சொல்லக்கூடிய ஒரே பொருள் உணவு மட்டும் தான்.
ஆற்றுவார் ஆற்றல்
பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார்
ஆற்றலின் பின்.
என்கிறார்
திருவள்ளுவர்.
அதாவது பசியை
பொறுத்துக்கொண்டு தவம் செய்பவர்களின் ஆற்றலை விட அப்பசியை போக்குபவர்களின் ஆற்றல்
மிகப்பெரிது என்கிறார் வள்ளுவர்.
ஆடை தானம்
ஆடை தானம்
செய்வதால் நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும். நோய் நொடி இன்றி வாழலாம். குழந்தைகள்
சிறு வயதில் இறந்து விடுவது தடுக்கப்படும். ஆடை தானம் அவரவர் ஜென்ம நட்சத்திர
நாளில் ஆடை தானம் செய்வது மிகவும் விசேஷமாகும்.அதிலும் வியாழக்கிழமை அன்று ஆடை
தானம் செய்வது மிகவும் சிறந்ததாகும்.குடும்ப விருத்தியும் ஏற்படும். உடல் வலிமையும்
உண்டாகும். உயிரை காட்டிலும் பெரிதாக கருதப்படும் ஆடை தானம் செய்வதால் பூர்வ ஜென்ம
பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.
காலணி தானம்
காலணி தானம்
செய்தால் முன்னோர்களின்
சாபத்திலிருந்து விமோச்சனம் கிடைக்கும்.புனித யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.
காலணி
வாங்குவதற்கு கூட கஷ்டப்படும் ஏழை எளியோர்க்கு இதை வாங்கி தருவதால் சிறந்த பலன்
கிடைக்கும்.
மாங்கல்ய
சரடு தானம்
மாங்கல்ய
சரடு தானம் செய்தால் மாங்கல்ய பலம்
அதிகரிக்கும். கோவில்கள்,பொது இடங்கள்,சுப காரியங்கள் நடக்கும் இடங்கள் போன்ற
இடங்களில் சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய சரடு தானமாக கொடுப்பதின் மூலம்
கொடுப்பவர்க்கும் மாங்கல்ய பலம் கூடும், வாங்குபவருக்கும் மாங்கல்ய பலம்
உண்டாகும்.
மாங்கல்ய சரடு
கொடுக்கும் போது அதனுடன் வளையல், முகம் பார்க்கும் கண்ணாடி, மஞ்சள்,குங்குமம்
இவற்றையும் சேர்த்து கொடுப்பது விசேஷ
பலன்களை கொடுக்கும்.
பொன் மாங்கல்யம்
தானம்
மாங்கல்ய தோஷம்
உள்ளவர்கள் ஏழை எளியோரின் திருமணதிற்கு பொன்னால் ஆன மாங்கல்யத்தை தானமாக
கொடுக்கலாம். இதனால் மாங்கல்ய தோஷம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.
திருமணம்
ஆனவர்களுக்கு மாங்கல்ய தோஷம் இருந்தால் கோவில் உண்டியலில் அவர்களின் மாங்கல்யத்தை
தானமாக செலுத்தி விடலாம்.இதன் மூலமும் மாங்கல்ய தோஷம் நிவர்த்தி ஆகும்.
குடை தானம்
குடை தானம் செய்தால்
தவறான வழியில் சேர்த்த
செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும் . குழந்தைகளுக்கு சிறப்பான
எதிர்காலம் உண்டாகும்.
நம் இல்லத்திற்கு வந்து நமக்காக பணியாற்றும்
வேலையாட்களுக்கு குடை தானம் செய்யலாம்.
பாய் தானம்
பாய் தானம் செய்வதால் பெரியவர்களை
புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம்
கிட்டும் . அமைதியான மரணம் ஏற்படும்.
கோரைப் புற்களால்
வேய்ந்த பாயை வாங்கித் தருவது விசேஷம். முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றில் இதை
செய்யலாம்.
கோ தானம்
கோ தானம்
செய்தால் இல்லத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகி சுபிட்சம் ஏற்படும். பல ஆயிரம்
வேத மந்திரங்கள் சொல்லி பூஜை செய்த பலன் கிடைக்கும்.
பசுவுடன்
கன்றையும் சேர்த்து தானம் செய்வது சிறந்ததாகும். லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.
நெய் தானம்
உடலில் தீராத நோய்கள் மற்றும் ஜாதகத்தில் பாவ திசை நடப்பவர்கள் சுத்தமான நெய்யை தானம் செய்யலாம். இதன் மூலம் அவர்களின் ஜாதக கிரகங்கள் சாந்தம் அடையும்.
உடலில் தீராத நோய்கள் மற்றும் ஜாதகத்தில் பாவ திசை நடப்பவர்கள் சுத்தமான நெய்யை தானம் செய்யலாம். இதன் மூலம் அவர்களின் ஜாதக கிரகங்கள் சாந்தம் அடையும்.
தேன்
தானம்
கடவுளின்
அபிஷேகத்திற்காக தேனை தானமாக அளிப்பதன் மூலம் புத்திர பாக்கியம் உண்டாகும்.
தீப
தானம்
கோவில்களில்
உள்ள தீபத்திற்கு எண்ணெயை தானமாக அளிப்பது, பிறர்
வீட்டில் விளக்கெரிய உதவுவது போன்ற நற் செயல்களை செய்வதன் மூலம் கண் பார்வை சிறப்பாக இருக்கும். அதோடு
நம் பித்ருக்கள் பாவம் செய்து அவர்களை இருள் சூழ்ந்திருந்தால் அந்த அருள் அவர்களை
விட்டு விலகும். இதன் மூலம் பித்ருக்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.
பழங்கள்
தானம்
நோயுற்ற
ஏழை எளியோருக்கு பழங்களை தானமாக அளிப்பதன் மூலம் நம் புத்தி தெளிவடையும்.